பிளாக் விடோ கதாபாத்திரத்தை ஆபாசமாக சித்தரித்த ஒரே மார்வெல் படம் அது தான்.. ஸ்கார்லெட் சாடல்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் பல ஆண்டுகளாக மார்வெல்ஸ் படங்களில் பிளாக் விடோ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அடுத்த மாதம் அவர் நடித்துள்ள பிளாக் விடோ திரைப்படம் வெளியாகிறது.

இந்நிலையில், நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் பிளாக் விடோ கதாபாத்திரத்தை மிகவும் ஆபாசமாக சித்தரித்த திரைப்படம் பற்றி மனம் திறந்துள்ளது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

ஸ்கார்லெட் ஜோஹன்சன்

ஸ்கார்லெட் ஜோஹன்சன்

ஹாலிவுட்டின் முன்னணி நடிகையான ஸ்கார்லெட் ஜோஹன்சன் மார்வெல் படங்களில் பிளாக் விடோ கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். டெட்பூல் நடிகர் ரியான் ரினால்ட்ஸ் உள்ளிட்ட மூன்று ஹாலிவுட் பிரபலங்களை அவர் திருமணம் செய்துள்ளார். இவர் நடித்த லூசி திரைப்படம் உலகளவில் பிரபலம்.

அடுத்த மாதம்

அடுத்த மாதம்

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் வில்லன் தானோஸையே அழித்து முடித்த பிறகு பிளாக் விடோ படத்தை மார்வெல் வெளியிட உள்ளது தேவையில்லாத ஆணி என்றே சொன்னாலும் மார்வெல் நடிகருக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். அடுத்த மாதம் ஜூலை 7ம் தேதி இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளில் முதலில் வெளியாகிறது. இரண்டு நாள் கழித்து 9ம் தேதி அமெரிக்காவில் வெளியாகவிருக்கிறது.

அதிகளவில் ஆபாசமாக

அதிகளவில் ஆபாசமாக

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் போகிற போக்கில் நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் தனது மனதில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடந்த மனக் குமுறலை கொட்டித் தீர்த்துள்ளார். மார்வெல் திரைப்படங்களிலேயே பிளாக் விடோ கதாபாத்திரத்தை மிகவும் ஆபாசமாக காட்டியது அயன்மேன் 2 படம் தான் எனக் கூறியுள்ளார்.

சதை பிண்டமாக இருந்தேன்

சதை பிண்டமாக இருந்தேன்

அந்த படத்தின் படப்பிடிப்பின் போது அதிகளவிலான ஆடை அவிழ்ப்பு காட்சிகள், அறைகுறை ஆடையில் ஆபாசமாக நடிக்க வேண்டிய சூழல் இருந்ததாகவும், அப்போது நான் ஒரு 'A Piece of Meat' போல உணர்ந்தேன் என்றும் காலிடர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் விட்டு விளாசி இருக்கிறார்.

டோனி ஸ்டார்க்

டோனி ஸ்டார்க்

அதுமட்டுமின்றி அயன்மேனாக நடித்த டோனி ஸ்டார்க் என் கைகளில் அவரது ஷூட் கையுறை மாட்டி விட்டு வெடிக்க செய்வது போல நெருங்கி பேசுவார். மேலும், 'I want Some' என அவர் பேசும் காட்சிகள் எல்லாம் ஆபாசம் நிறைந்ததாகவே இருந்தது. அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு நடிக்க வேண்டிய சூழல் அப்போதிருந்தது எனக் கொட்டித் தீர்த்து இருப்பது ஹாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

அந்த பயம் இருக்கு

அந்த பயம் இருக்கு

உலகளவில் பிரபலமான நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் சமூக வலைதளங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் என எதிலுமே அவர் இல்லை. வ உலகளவில் பல பிரபலங்களுக்கு இருக்கும்சோஷியல் மீடியா அலர்ஜி அவருக்கும் இருக்கிறது.

More from Filmibeat

Read more about: black widow
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X