twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆணாக மாற விரும்பவில்லை... பிரபல நடிகையின் திடீர் முடிவு!

    ஹாலிவுட் நடிகை ஸ்கேர்லட் ஜோஹன்சன் திருநம்பியாக நடிப்பதை கைவிட்டுள்ளார்.

    |

    நியூயார்க்: திருநம்பி கதாபாத்திரத்தில் நடிக்கும் முடிவை கைவிடுவதாக ஹாலிவுட் நடிகை ஸ்கேர்லட் ஹோஹன்சன் தெரிவித்துள்ளார்.

    தி அவெஞெர்ஸ், அவெஞெர்ஸ் இன்ஃபினிட்டி வார்ஸ், லூஸி, கோஸ்ட் இன் த ஷெல் போன்ற படங்களில் நடித்தவர் ஹாலிவுட் நடிகை ஸ்கேர்லட் ஜொஹன்சன். நடிகை மட்டிமல்லாது பாடகியாகவும் இருக்கும் இவருடை பேட் ட்ரீம்ஸ் ஆல்பத்தின் பாடல் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    Scarlett Johansson left her transgender project

    ஸ்கேர்லட் சமீபத்தில், கோஸ்ட் இன் த ஷெல் திரைப்பட இயக்குனர் ரூபெர்ட் சாண்டர்ஸ் இயக்கும் ரப் & டப் திரைப்படத்தில் திருநம்பியாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அதற்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் மூன்றாம் பாலின அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    ரப் & டப் திரைப்படம், 1970களில் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க் நகரில் வாழ்ந்த ஒரு திருநம்பியின் கதை. டாண்ட்டே டெக்ஸ் கில்" என்ற திருநம்பி கொள்ளைக்கூட்ட தலைவனாக வாழ்ந்ததை சித்தரிக்கும் படம் தான் இந்த ரப்&டப்.

    இந்த கதாபாத்திரத்தில் உண்மையான திருநம்பிதான் நடிக்கவேண்டுமென்றும், வெள்ளை இனப் பெண்ணாக பிறந்த நடிகை ஸ்கேர்லட் ஜோஹன்சன் நடித்தால் தங்கள் மனம் புண்படும் என்றும் எல்.ஜி.பி.டி குழுக்கள் போர்க்கொடி தூக்கின.

    அவர்களின் கோரிக்கையை ஏற்று ஸ்கேர்லட் ஜோஹன்சன் இந்த திரைப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மூன்றாம் பாலினத்தவர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அவர்கள் மனது புன்படும் செயலை ஒருபோதும் செய்ய மாட்டேன் எனவும் நடிகை ஸ்கேர்லட் தெரிவித்துள்ளார்.

    English summary
    Hollywood actress Scarlett Johansson has dropped her Rub&Tub movie projects. She committed this film to play a transgender crime boss role based on the 1970 true events. But few LGBBT groups are not ready to encourage her role as transgender, so she left the project.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X