ஜில்லாவில் விஜய்-மோகன்லால் சேர்ந்து வரும் காட்சிகள் அள்ளும்: நேசன்

By Siva

சென்னை: ஜில்லா படத்தில் விஜய், மோகன்லால் சேர்ந்து வரும் காட்சிகள் தான் ஹைலைட்டாக இருக்கும் என்று இயக்குனர் நேசன் தெரிவித்துள்ளார்.

நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிக்கும் படம் ஜில்லா. படம் பற்றி நேசன் கூறுகையில், ஒரே படத்தில் இரண்டு சூப்பர்ஸ்டார்களுடன் பணிபுரிவது சவாலான விஷயம். என் வேலையில் நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நடிகர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். அவர்களை திரையில் நான் எப்படி காண்பிக்கிறேன் என்பதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

விஜய்-மோகன்லால் சேர்ந்து வரும் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த படத்தின் ஷூட்டிங் மதுரை, சென்னை மற்றும் ஆந்திராவில் நடக்கும். எல்லாம் நன்றாகப் போனால் படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று நேசன் தெரிவித்தார்.

கிராமத்து கெட்டப்

கிராமத்து கெட்டப்

நண்பன், துப்பாக்கி என அடுத்தடுத்த படங்களில் நகரவாசியாக நடித்த விஜய் ஜில்லா படத்தில் கிராமத்து ஆளாக நடிக்கிறார்.

மதுரக்காரர் விஜய்

மதுரக்காரர் விஜய்

ஜில்லாவில் விஜய் மதுரைக்காரராக நடிக்கிறார். படத்தில் அவர் மதுரைக்காரர்கள் போன்று அவிங்க, இவிங்க என்று பேசுவதைப் பார்க்கலாம்.

மீண்டும் நடிக்க வரும் பூர்ணிமா

மீண்டும் நடிக்க வரும் பூர்ணிமா

சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த பூர்ணிமா பாக்யராஜ் பல ஆண்டுகள் கழித்து ஜில்லா படம் மூலம் ரீஎன்ட்ரீ ஆகிறார்.

படத்தை தயாரிக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ்

படத்தை தயாரிக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ்

ஜில்லா படத்தை ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

இசையமைக்கும் இமான்

இசையமைக்கும் இமான்

ஜில்லாவுக்கு இசை அமைக்கிறார் இமான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X