ராமராஜன் பாட்டுக்கு இப்படியொரு ஆட்டமா? அடேய் தம்பி.. அந்த 19வது செகண்ட் தான் ஹைலைட்டே.. ஜாலி வீடியோ!

சென்னை: இணையத்தில் அவ்வப்போது பல க்யூட் வீடியோக்கள் உலா வருவது என்பது வாடிக்கையானது தான். பல்வேறு நாடுகளில் நடக்கும் பல சம்பவங்கள் தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் மிகப்பெரிய கவனத்தை உலக அளவில் எல்லாம் ஈர்த்துள்ளது. இந்நிலையில் தற்போது, ராமராஜனின் கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான முந்தி முந்தி விநாயகனே பாடலுக்கு பள்ளிக் குழந்தைகள் செம க்யூட்டாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பார்ப்பதற்கே செம க்யூட்டாக இருக்கும் இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

கங்கை அமரன் இயக்கத்தில் உருவாகி, கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான படம் கரகாட்டக்காரன். இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், காந்திமதி, கோவை சரளா, வாகை சந்திரசேகர், சந்தானபாரதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் எவர் கிரீன் படங்களில் ஒன்று. இன்றைக்கு இந்தப் படத்தைப் பார்த்தாலும் செம கமர்ஷியலாக அவ்வளவு ஃபிரஷ்ஷாக இருக்கும். குறிப்பாக செந்தில் - கவுண்டமணி காமெடிக்கு என்றே இந்த படத்தை பலமுறை பார்த்த ரசிகர்கள் இருக்கிறார்கள்.

School Children Cute Dance For Ramarajan Karakattakaran Movie Song Video Goes Boom On Internet
Photo Credit:

படம் வெளியான காலத்திலேயே மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அதுவும் படத்தை பலமுறை தியேட்டரில் பார்த்த அனுபவத்தை கொண்ட ரசிகர்கள் இப்போதும் இருக்கிறார்கள். ஊர் திருவிழாக்களில் திரை கட்டி ஊருக்குள் பிரத்யேகமாக திரையிடப்பட்ட படங்களில் ராமராஜனின் கரகாட்டக்காரன் படம், எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு இணையாக இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த படத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணம், இளையராஜாவின் இசை. படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மாஸ் ஹிட். இன்றைக்கு கேட்டாலும் உருக வைக்கும் மெலடியில் இருந்து, படத்தின் கதையை பாட்டிலே சொல்லுவது வரை அனைத்தையும் உணரும் அளவுக்கு இருக்கும்.

க்யூட் வீடியோ: ராமராஜ்க்கு அவரது திரைவாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியையும் திருப்பு முனையையும் ஏற்படுத்திக் கொடுத்த படம் இதுதான் எனலாம். இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் முந்தி முந்தி விநாயகனே. இந்த பாடலை பாடகர்கள் மனோ மற்றும் சித்ரா பாடியிருப்பார்கள். இப்போது இந்த பாடலுக்கு பள்ளி குழந்தைகள் நடனமாடும் செம க்யூட்டான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

School Children Cute Dance For Ramarajan Karakattakaran Movie Song Video Goes Boom On Internet
Photo Credit:

19 வது நொடி: அதாவது பள்ளிக் குழந்தைகள் மிகவும் க்யூட்டாக நடனமாடுகிறார்கள். அதுவும் அவர்களுக்கு பின்னர் திரையில் பாடலின் வீடியோ ஓடிக்கொண்டு இருக்கிறது. குழந்தைகளும் எவ்வளவு அழகாக நடனமாடி வருகிறார்கள். இப்படி இருக்கும்போது, அந்த வீடியோவில் இருக்கும் மாணவன் 19வது நொடியில் நடனத்துக்கு நடுவே, தனது வாயைத் துடைப்பது எல்லாம் செம க்யூட்டாக உள்ளது.

கண்ணு பட்டிருக்கும்: தற்போது இந்த வீடியோவைப் பார்த்த பலரும், ராமராஜன் பாட்டுக்கு இந்த குழந்தைகள் இவ்வளவு அழகா ஆடுறாங்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் சிலரோ குழந்தைகளுக்கு சுத்தி போடுங்க கண்ணு பட்டுடுச்சு எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இப்போது இந்த வீடியோ இணையத்தைக் கலக்கும் வீடியோக்களில் ஒன்றாக மாறி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X