விஜய் படத்தை டிவியில் போட மாட்டிங்கறாங்க.. அழுத குழந்தை.. யெப்பா டிவி சேனல் காரங்களே இதை கேளுங்க
ஈரோடு: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று அதாவது டிசம்பர் 18ஆம் தேதி ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தில் விஜயின் தீவிர ரசிகர்கள் தொடங்கி, தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பள்ளி சிறுவர்கள், சிறுமிகள் தொடங்கி கல்லூரி மாணவர்கள் வயதுடையவர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறுமி ஒருவர், விஜய் படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது இல்லை என்று கண்ணீருடன் கேட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதாவது அந்த பெண் குழந்தை கண்ணீருடன் பேசுகையில், " விஜய் அண்ணா படமே போட மாட்டேன் என்கிறார்கள். வீணாகப் போன படங்கள் தான் போடுகிறார்கள். டிவியில் விஜய் அண்ணா படம் போட்டால் என்னவாம் என்று அழுது கொண்டே கேட்டார். உடனே ஊடகவியலாளர், ஏன் அழுகிறாய்? விஜய்யை அவ்வளவு பிடிக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

கண்ணீரில் குட்டி ரசிகை: அதற்கு ஆமாம், அவரை ரொம்ப பிடிக்கும். நாங்கள் அவரை பார்க்க அவரது வீட்டிற்கே சென்றோம். நாங்கள் போனபோது அவர் வீட்டில் இல்லை அலுவலகத்திற்கு போய்விட்டார் என்று கூறினார்கள். அதன் பின்னர் வீட்டைத் திறந்து காட்டினார்கள். நாங்கள் வெளியில் நின்று கொண்டு எட்டிப் பார்த்தோம் என்று தெரிவித்தார். அவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சில இணையவாசிகளோ " யெப்பா டிவி சேனல் காரர்களே, இந்த குழந்தையின் கண்ணீரைப் பாருங்கப்பா. இந்த குழந்தைக்காகவாவது, டிவியில் விஜய் படத்தை போடுங்கப்பா" என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
கோபமான விஜய்: இந்த பிரச்சாரத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து ஒரு செல்பி வீடியோ எடுத்துக் கொண்டார். இது மட்டும் இல்லாமல் விஜய் பேசிக் கொண்டு இருக்கும்போது, ரசிகர் ஒருவர் அங்கு இருந்த உயரமான மின் கம்பத்தில் ஏறி, தவெக துண்டினை சுற்றிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த விஜய், தனது பேச்சை நிறுத்திவிட்டு, உடனே அந்த ரசிகரை கீழே இறங்கச் சொன்னார். ஆனால் அந்த ரசிகர் மேலே அமர்ந்து கொண்டு பறக்கும் முத்தங்கள் கொடுத்தார். உடனே, விஜய் கோபத்தில், நீ கீழ இறங்குப்பா தம்பி, அதுக்கு அப்புறமா நான் முத்தம் கொடுக்கிறேன் என்றும் கூறினார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக போய்க்கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications











