Vijay Fans: என்னோட ஓட்டு TVKவுக்கு தான்னு சொன்ன பள்ளி மாணவர்.. பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: தேர்தல் களத்தில் ஒரு பக்கம் நடிகர், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மிகவும் பரபரப்பாக பிரசாரத்தை மேற்கொண்டு வந்தாலும் மறுபுறம் தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான விமர்சனங்களும் சர்ச்சைகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தூய சக்தி தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தீய சக்தி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையில் தான் இந்த தேர்தல் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இருந்தே பிரச்சாரத்தை கட்டமைத்துக் கொண்டிருந்த நடிகர் விஜய், தனது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்த பின்னர் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளார்.
குறிப்பாக அவர் அறிவித்த வேட்பாளர்களில் பலர் குற்றப் பின்னணி உடையவர்கள், இதனால் குற்றப் பின்னணியை குறிப்பிட்டு இதுதான் தூய சக்தியா? என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். அதேபோல் மேடையில் தன்னை ஒரு சாதி வெறியன் என்று அறிவித்துக் கொண்ட ஒரு வேட்பாளருக்கு விஜய் எப்படி தனது கட்சியின் சார்பாக போட்டியிட வாய்ப்பு வழங்கினார்? இதுதான் தூய சக்தியா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சர்ச்சை பேச்சு: ஏற்கனவே நடிகர் விஜயின் ரசிகைகள் சிலர் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறேன் என்று பேசியவை பெரும் சர்ச்சையை கிளப்பியது. குறிப்பாக ரசிகை ஒருவர் விஜயன் விவாகரத்து குறித்த தகவல்கள் வெளியானதும், நாங்கள் விஜய்க்கு அக்காவாக இருப்போம், தங்கையாக இருப்போம், ஏன் தேவைப்பட்டால் மனைவியாக கூட இருப்போம் என்று பேசியது பெரும் சர்ச்சையாக மாறியது. இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது ரசிகைகளை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் இதுபோல கருத்துக்களை தெரிவிக்க கூடாது என்று வலியுறுத்த வேண்டும் என்றும் பலர் கூறினர்.
விஜய் ரசிகர்கள்: அதேபோல் ஏற்கனவே அவரது ரசிகர்களும் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறேன் என்று நெட்டிசன்களால் பயங்கரமாக கலாய்க்கப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் திருச்சியில் விஜய் ஏப்ரல் இரண்டாம் தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டு பிரச்சாரம் நடத்தினார். அப்போது அங்கு கலந்து கொள்ள வந்த ஒரு பள்ளி மாணவர் பேசுகையில், "என்னோட ஓட்டு விஜய்க்கு தான். நான் தவெகவுக்கு தான் ஓட்டு போடுவேன். நீங்களும் தவெகவுக்கு ஓட்டு போடுங்க என்று கூறுகிறார். இவ்வாறு அந்த மாணவன் கூறி முடித்ததும் அந்த மாணவனை வீடியோ எடுத்த நபர்," எத்தனாவது தம்பி படிக்கிறாய் என்று கேட்டதற்கு, பத்தாவது படிக்கிறேன் என்று அந்த மாணவர் பதில் அளித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவது மட்டுமில்லாமல் நெட்டிசன்கள் பலராலும் கலாய்க்கப்பட்டு வருகிறது.

கலாய்: அதாவது பத்தாவது படிக்கும் மாணவனின் வயது 15 வயது தான் அதிகபட்சமாக இருக்கும் அப்படி இருக்கையில் அந்த மாணவனுக்கு வாக்குரிமை என்பது இல்லை இது கூட தெரியாமல் அந்த மாணவன் பேசுகிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். அதே நேரத்தில் அந்த மாணவர் தான் எதிர்காலத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பேன் என்பதைத்தான் இவ்வாறு கூறியுள்ளார் என்று அந்த மாணவனுக்கு ஆதரவாகவும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











