'நதிகள் நனைவதில்லை' படம் பார்த்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை - இயக்குனருக்கு பாராட்டு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி மயில்சாமி ஆண்ணாதுரை, 'நதிகள் நனைவதில்லை' படத்தைப் பார்த்து இயக்குனர் பி.சி.அன்பழகனைப் பாராட்டினார்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கான இந்தியா அனுப்பிய மங்கள்யான் பயணத்திற்கு பெரும் பங்காற்றிய விஞ்ஞானியான மயில்சாமி ஆண்ணாதுரை, தனக்கு திரைப்படம் பார்க்கும் பழக்கும் இல்லை என்றும் அதற்கு நேரமும் இல்லை என்றும் கூறுபவர். அப்படிப்பட்டவர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நதிகள் நனைவதில்லை' படத்தை பார்க்க விரும்பியுள்ளார்.

அவர் விருப்பத்துக்கேற்ப சமீபத்தில் சென்னை இசைக் கல்லூரியில், உள்ள தாகூர் பிலிம் செண்டர் பிரிவியூ தியேட்டரில் திரையிடப்பட்ட சிறப்புக் காட்சியில், தனது மனைவியுடன் வந்து 'நதிகள் நனைவதில்லை' படம் பார்த்தார்.
படம் முடிந்த பிறகு, படத்தில் நடித்த ஹீரோ ப்ரணாவையும், இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகனையும் வாழ்த்திய மயில்சாமி அண்ணாதுரை, "படத்தின் கதையும், வசனங்களும், பாடல்களும், படமாக்கப்பட்ட விதமும் தம்மை மிகவும் கவர்ந்ததாகக் கூறினார். க்ளைமாக்ஸ் காட்சியையும் பாராட்டினார்.
'கன்னியாகுமரியின் ஒட்டுமொத்த அழகையும் வெண்திரை இல்லாமல் நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. படத்தில் சண்டைக் காட்சிகளையும் ரசிக்கும்படியாக படமாக்கியுள்ள இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், குடும்பத்தோடு பார்க்ககூடிய உயர்ந்த கருத்துக்கள் கொண்ட காட்சிகளை வைத்து, இது ஒரு முக்கியமான படம், என்று சொல்லும்படியாக படத்தை இயக்கியிருக்கிறார்.
படம் முடிந்த பிறகும், படத்தின் அநேக காட்சிகள் மனசை விட்டு அகல மறுக்கின்றன. இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகனுக்கு இந்த படம் திருப்பத்தை தரும், படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்," என்று பாராட்டினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 'நதிகள் நனைவதில்லை' பாடல்கள் வெளியீட்டு விழாவிலும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, பாடல்களை வெளியிட்டார்.

பெற்றொர்கள், தங்கள் கனவுகளை பிள்ளைகளின் தலையில் போட்டு உடைக்ககூடாது, அவரவர் கால்களில்தான்...அவரவர் பயணங்கள், நம்பிக்கையில்லாத மனிதனுக்கு இதயமும் சுமைதான், குறுக்கு வழியின் துணை கொண்டு, மஹால்களை கட்டுவதை விட...நேர்வழியின் கரம் பற்றி குடிசையில் தூங்குவதே ஆத்ம செல்வமாகும் போன்ற கருத்துக்களை மையமாக வைத்து உருவாகியுள்ள படம்தான் 'நதிகள் நனைவதில்லை'.

இதில் பிரணவ், மோனிகா, நிசா, காயத்திரி, கல்யாணி, சரிதா, செந்தில், பாலாசிங், மதுரை முத்து, சிங்கமுத்து, குண்டுகல்யாணம் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செளந்தர்யன் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











