Scoop : தல பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் இருக்கா.. இல்லையா?

அஜித் பிறந்தநாளுக்கு நேர்கொண்ட பார்வை பட அப்டேட் எதுவும் இருக்காது எனத் தெரியவந்துள்ளது.

Recommended Video

நடிகர் அஜித்தின் பிறந்தநாளுக்கு நேர்கொண்ட பார்வை பட அப்டேட் எதுவும் இருக்குமா இல்லையா

சென்னை: நடிகர் அஜித்தின் பிறந்தநாளுக்கு நேர்கொண்ட பார்வை பட அப்டேட் எதுவும் இருக்குமா இல்லையா என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான இதனை போனிகபூர் தயாரிக்க, ஹெச். வினோத் இயக்குகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. முதலில் அப்படம் மே ஒன்றாம் தேதி அஜித் பிறந்தநாளை ஒட்டி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் சில பல காரணங்களால் பட ரிலீஸ் ஆகஸ்ட்டுக்கு தள்ளிப் போய் உள்ளது.

நேர் கொண்ட பார்வை டீசர்:

நேர் கொண்ட பார்வை டீசர்:

இதனால் சோகத்தில் உள்ள அஜித் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, தல பிறந்தநாளன்று நேர்கொண்ட பார்வை பட டீசர் வெளியாகும் என தகவல்கள் வெளியானது. அதோடு, அஜித்தின் அடுத்த பட அறிவிப்பும் அன்று வெளியாகலாம் எனக் கூறப்பட்டது.

அஜித் முடிவு:

அஜித் முடிவு:

ஆனால், தற்போது நமக்குக் கிடைத்துள்ள நம்பத்தகுந்த தகவல்களின்படி, அப்படி பிறந்தநாள் சர்ப்பிரைஸ் எதுவும் அஜித் தரப் போவதில்லை எனத் தெரிய வந்துள்ளது. இது போன்ற பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அஜித் ஆர்வம் காட்டாதவர் என்பதால், இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

எதிர்பார்ப்பு:

எதிர்பார்ப்பு:

வாக்களிப்பின் போது அஜித் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோவால், ஏற்கனவே அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். அதற்காகவாவது, தங்களை மகிழ்விக்கும் வகையில் நேர்கொண்ட பார்வை படம் சம்பந்தமான ஏதாவது அப்டேட்டை படக்குழு அறிவிக்க வேண்டும் என்பதே தல ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

அதிரடி அறிவிப்புகள்:

அதிரடி அறிவிப்புகள்:

அஜித்தின் முந்தைய பட அப்டேட்டுகளை விட, நேர்கொண்ட பார்வை படம் சம்பந்தமான அறிவிப்புகள் எல்லாமே திடீர் திடீரென வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்த அடிப்படையில், அப்படம் பற்றிய அறிவிப்பு அஜித் பிறந்தநாளுக்கு முந்தைய தினமோ அல்லது அடுத்த தினமோ கூட வரலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அப்படி எந்த அறிவிப்புகள் வந்தாலும் அதனை தல ரசிகர்கள் திருவிழாவாகக் கொண்டாடி விடுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X