Scoop:தேர்தல்ல தோத்தாலும், ஜெயிச்சாலும்.. கமல் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

பிக் பாஸ் சீசன் 3வது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்குகிறார்.

Recommended Video

Actor Kamal Big Boss: பிக் பாஸ் சீசன் 3-யையும் நடிகர் கமலே தொகுத்து வழங்க இருக்கிறார்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் சீசன் 3யையும் நடிகர் கமலே தொகுத்து வழங்க இருக்கிறார்.

நடிகர் கமல் அரசியலில் குதிப்பதற்கு முன் முதன்முறையாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனை தொகுத்து வழங்கினார். அதன் தொடர்ச்சியாக இரண்டாவது சீசனுக்கும் அவரே நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் தீவிர அரசியலில் இறங்கி விட்டார்.

மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் நாற்பது தொகுதியிலும் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துக் களமிறங்கியுள்ளது. இத்தேர்தலில் கமல் வேட்பாளராக போட்டியிடவில்லை என்ற போதும், தனது கட்சி வேட்பாளர்களுக்காக அவர் தீவிர பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

 பாதியில் நிற்கும் இந்தியன் 2

பாதியில் நிற்கும் இந்தியன் 2

இதனால் ஏற்கனவே பூஜை போடப்பட்ட இந்தியன் 2 பட வேலைகளும்கூட பாதியில் நிற்கிறது. எப்போது மீண்டும் அப்பட வேலைகள் தொடங்கும் என்பது தெரியவில்லை.

பிக் பாஸ் சீசன் 3

பிக் பாஸ் சீசன் 3

இப்படியாக கமல் கட்சிப் பணிகளில் தீவிரமாக இருப்பதால், பிக் பாஸ் சீசன் 3ஐ அவரே தொகுத்து வழங்குவாரா என்பதில் மக்களுக்கு சந்தேகம் இருந்து வந்தது. ஆனால், தற்போது அதற்கு தெளிவான ஒரு பதில் கிடைத்துள்ளது.

கமல் தான் ஆங்கர்

கமல் தான் ஆங்கர்

ஆம், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது. வழக்கம் போல், வரும் ஜூன் மாதம் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X