Scoop: மீண்டும் லண்டன் பறக்கும் சிம்பு.. இம்முறை என்ன செய்யப் போகிறார் தெரியுமா?

மீண்டும் லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளார் சிம்பு.

Recommended Video

Actor Simbhu: சிம்பு விரைவில் மீண்டும் லண்டன் பறக்க இருக்கிறாராம்- வீடியோ

சென்னை : தம்பி திருமணத்திற்காக சென்னை வந்திருந்த சிம்பு, விரைவில் மீண்டும் லண்டன் பறக்க இருக்கிறாராம்.

அதிக உடல் எடையுடன் காணப்படுகிறார், தொப்பை இருக்கிறது என விமர்சிக்கப்பட்டதால் லண்டன் சென்று உடல் எடையைக் குறைத்துள்ளார் சிம்பு. லண்டனில் இருந்து அவர் வெளியிட்ட படங்களைப் பார்த்த ரசிகர்கள் அசந்து போயினர். காரணம் அந்தளவிற்கு உடல் எடையைக் குறைத்திருந்தார் அவர்.

இந்நிலையில் கடந்த வாரம் தம்பி குறளரசன் திருமணத்திற்காக மீண்டும் சென்னை திரும்பினார் சிம்பு.

ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி:

ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி:

அப்போது நேரிலும், புகைப்படங்களிலும் அவரைப் பார்த்தவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அப்படி ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்' என லண்டன் சென்று உடல் எடையை அவர் குறைத்திருந்தார். மீண்டும் இளமையான சிம்புவைக் கண்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாநாடு படம்:

மாநாடு படம்:

சிம்பு சென்னை திரும்பி விட்டதால் விரைவில் மாநாடு படம் ஆரம்பிக்கும் என செய்திகள் வெளியானது. ஆனால், மீண்டும் விரைவில் லண்டன் செல்ல இருக்கிறாராம் சிம்பு. தற்போது 31 நாளில் எவ்வித சிகிச்சையும் இல்லாமல், தீவிர உடற்பயிற்சி மூலம் மட்டுமே 13 கிலோ வரை அவர் உடல் எடையைக் குறைத்துள்ளார்.

மீண்டும் லண்டன்:

மீண்டும் லண்டன்:

எப்போதும் உடல் எடையை அதிரடியாகக் குறைக்கும் போது, தோல் சற்று தொங்கிப் போவது வழக்கம். தற்போது அதனை மீண்டும் இறுக்கும் உடற்பயிற்சிகளுக்காக அவர் லண்டன் செல்ல இருக்கிறாராம். அங்கு அவர் ஒரு மாதம் தங்கி இருப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்முறை அவர் தற்காப்பு கலை இதனை அவர் செய்ய இருக்கிறார்.

இன்னும் இளமையாக:

இன்னும் இளமையாக:

இதற்கிடையில் மாநாடு படக் கதையை மேலும் மெருகேற்றும் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாம். லண்டனில் இருந்து சிம்பு திரும்பியதும் படப்பிடிப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போதே மெலிந்து இளமையாக வாவ் என மாறியுள்ள சிம்பு, இந்த லண்டன் பயணத்திற்குப் பிறகு இன்னும் வாரே வாவ் ஆக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X