Screen Doctor: இந்த ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செஞ்சிருந்தா விடாமுயற்சி பிளாக்பஸ்டர் ஆகியிருக்கும்!

சென்னை: இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வந்த பல பெரிய திரைப்படங்கள் ரசிகர்களை கூட கவராத வகையில் படுதோல்வியை சந்தித்தன. முன் தினம் பார்த்தேனே, தடையற தாக்க, மீகாமன், தடம், கலக தலைவன் படங்களை இயக்கிய மகிழ் திருமேனிக்கு அஜித் குமாரின் 62வது படத்தை இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

லைகா தயாரிப்பில் அவர் இயக்கிய விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் குமாருடன் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்தனர். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி வெளியான விடாமுயற்சி திரைப்படம் அஜித் ரசிக்ர்களையே அப்செட் ஆக்கியது தான் ஜீரணிக்க முடியவில்லை.

Screen Doctor These small changes may turn Ajith Kumar s Vidaamuyarchi movie into Blockbuster
Photo Credit:

விஜய் எப்படி ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் படத்தை இன்ஸ்பயர் செய்து லியோ படத்தில் நடித்தாரோ, த்ரிஷா, அர்ஜுனை நடிக்க வைத்தாரோ அதே வெற்றி ஃபார்மூலாவைத் தான் அஜித்தும் பிரேக்டவுன் எனும் ஹாலிவுட் படத்தை இன்ஸ்பயர் செய்து இந்த படத்தை உருவாக்கினார். ஆனால், பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியை இந்த படம் சந்தித்து விட்டது. ஹாலிவுட்டில் ஹிட்டடித்த ஒரு சூப்பர் படத்தை தமிழில் எடுத்த நிலையில், அது ஏன் தடம் புரண்டது என்பதையும், ஒரு சின்ன விஷயத்தை படக்குழு கொஞ்சம் கவனிப்பாக செய்திருந்தால் கூட படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்திருக்கும் என்கிற அலசலை இங்கே பார்க்கலாம் வாங்க..

விடாமுயற்சி கதை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் தான் விடாமுயற்சி. அனிருத் இசையில் வெளியான சவதீகா பாடல் எல்லாம் வேறலெவலில் ஹிட் அடித்தது. அர்ஜுன் (அஜித்) தன்னை முன்பை போல காதலிப்பது கிடையாது என நினைக்கும் கயல் (த்ரிஷா) அவரை விடுத்து பிரகாஷ் என்பவரை காதலிக்கிறார். அதன் காரணமாக விவாகரத்து பெற்று பிரியப் போவதாக அர்ஜுனிடம் கூற, அவர் கயலின் அம்மா வீட்டில் விடுவதற்காக அஜர்பைஜான் சாலை வழியாக செல்லலாம், இது நம்மோட கடைசி ரோடு ட்ரிப்பாக இருக்கட்டும், நானே உன்னை ட்ராப் செய்கிறேன் என்று சொல்ல, அவரும் சம்மதிக்கிறார். ஆனால், வழியில் அர்ஜுனின் வண்டி பிரேக்டவுன் ஆக டிரக் ஓட்டி வரும் ரக்‌ஷித் (அர்ஜுன்) வண்டியில் ஏறிச் சென்று உதவி பெற்று வருவதாக செல்லும் கயல் காணாமல் போகிறார். அவரை தேடிப் பிடித்து ரக்‌ஷித் மற்றும் அவரது கூட்டத்தை காலி செய்வது தான் கதை. கடைசியில், தனக்காக இவ்வளவு விடாமுயற்சியுடன் போராடிய அர்ஜுனை பிரிய மனமில்லை என கயல் அவருடன் சேர்ந்து விடுகிறார்.

படம் சறுக்கியது எங்கே?: ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் படத்தில் இல்லாத அந்த நரபலி ஃபிளாஷ்பேக்கை வைத்து லியோ படத்தை சொதப்பியிருப்பார்கள். அதே போல இங்கே தேவையில்லாத விவாகரத்து மேட்டரையும் த்ரிஷாவுக்கு பிரகாஷ் என்பவருடன் காதல் ஏற்பட்டதாகவும், அர்ஜுன் மற்றும் ரெஜினா கசாண்ட்ராவுக்கு ஒரு ஃபிளாஷ்பேக் என பிரேக்டவுன் படத்தில் இல்லாத விஷயங்களை பெரிய படமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் மகிழ் திருமேனி நீட்டி முழக்கியது தான் படத்திற்கு பெரிய பிரச்னையாக வந்தது.

Screen Doctor These small changes may turn Ajith Kumar s Vidaamuyarchi movie into Blockbuster
Photo Credit:

எடிட்டிங்கில் கூட சரி செய்திருக்கலாம்: கதைப்படியோ, கூடுதலாக சேர்க்கப்பட்ட காட்சிகள் வழியாகவோ கூட இந்த படத்துக்கு பெரிதாக பாதிப்பில்லை. ஆனால், சவதீகா பாடல் முடிவடைந்த பின்னர், த்ரிஷா மற்றும் அஜித் இருவரும் விவாகரத்து பெறப்போவது ரிவீல் செய்யப்பட்டதும் அதுவரை குதூகலமாக இருந்த அஜித் ரசிகர்கள் அப்படியே மயான அமைதிக்கு சென்ற இடம் தான் உண்மையாகவே படத்துக்கு பெரிய மைனஸ் பாயின்ட் அந்த இடத்தை அங்கே ஓபன் செய்யாமல், கடைசி வரை இருவருக்கும் என்ன பிரச்னை ஏன் பிரிய முடிவு செய்கின்றனர் என்பதை நான் லீனியர் ஸ்டோரி டெல்லிங்கில் எடிட்டிங் மூலமாக கடத்தி சென்றிருந்தால், நிச்சயம் விடாமுயற்சி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆகியிருக்கும்.

Take a Poll

கடுமையான உழைப்பு: நடிகர் அஜித் இந்த படத்துக்காக போட்ட உழைப்பு ரொம்பவே பெரிது. கார் விபத்து காட்சிகளை எல்லாம் அந்தளவுக்கு எடுத்திருப்பார்கள். அஜித் காருக்குள் போடும் சண்டை சீனும் அதற்கு அனிருத்தின் இசையும் பிரம்மிப்பு. தமிழ்நாட்டில் ஒரு படத்தை எடுக்கவே பல பஞ்சாயத்துகளை சந்திக்க நேரிடும். அஜர்பைஜானில் இப்படியொரு படத்தை எடுக்க இயக்குநர் முதல் அங்கே ஸ்டன்ட் காட்சிகளை படமாக்க ஒட்டுமொத்த டீமும் போட்ட கடின உழைப்பு எல்லாம் வீணாகி போய்விட்டது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு எல்லாம் தமிழ் படமா? ஹாலிவுட் படமா? என்கிற ரீதியில் டாப் கிளாஸாக இருந்தும் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாத நிலையில், தான் இந்த படம் சொதப்பியது. அதை மட்டும் இயக்குநர் மகிழ் திருமேனி கொஞ்சம் செதுக்கியிருந்தால், இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் படமாகவே மாறியிருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X