Screen Doctor: இந்த ஒரு நான் லீனியர் கட் செஞ்சிருந்தா கூட ‘தக் லைஃப்’ படத்தை காப்பாத்தியிருக்கலாம்!

சென்னை: கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரிதாக வரவேற்பு பெறாமல் தியேட்டரில் மிகப்பெரிய டிசாஸ்டராக மாறியது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான பின்னர், அந்த படத்தை பார்த்த பலரும் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். தொடர்ந்து இந்தியளவில் டாப் 5 வது இடத்தில் நெட்பிளிக்ஸில் இடம்பிடித்துள்ளது தக் லைஃப்.

நாயகன் படத்துக்குப் பிறகு மீண்டும் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணி என்றதுமே ரசிகர்கள் இந்த படத்தின் மீது அதிக ஆர்வத்தை காட்டினர். இந்தியன் 2 படத்தின் படுதோல்விக்குப் பிறகு நிச்சயம் கமல்ஹாசன் இந்த முறை மீண்டும் ரசிகர்களை ஏமாற்றமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது.

Screen Doctor This one non linear cut may save Kamal Haasan s Thug Life movie
Photo Credit:

ஏ.ஆர். ரஹ்மான் இசை, சிம்பு, த்ரிஷா கூட்டணி, கமல், அபிராமி ஜோடி, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் காஸ்டிங் என படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு பெரிதளவில் இருந்த நிலையில், அதனை பலூன் போல கமல்ஹாசன் மிகப்பெரிய புரமோஷன்களை ஒரு மாத காலம் இந்தியா முழுவதும் செய்து ஒரு பெரிய பஞ்சாயத்தையும் கிளப்பி புரமோட் செய்தாலும், தியேட்டருக்கு மக்களின் பார்வைக்கு வந்த பின்னர், அந்த படம் எடுபடவில்லை.

தக் லைஃப் கதை: கேங்ஸ்டர் கூட்டத்தை சேர்ந்த சின்னவர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் தனது அண்ணன் நாசருடன் ஒரு டீலிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இன்னொரு கேங்ஸ்டர் ஆட்காட்டியாக மாறி இவர்களை போலீஸ் என்கவுண்ட்டரில் சிக்க வைக்க, அன்கிருந்து ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு தனது உயிரை காப்பாற்றிக் கொண்டு எஸ்கேப் ஆகிறார் சக்திவேல். அப்பாவை இழந்து விட்டு தங்கையையும் தொலைத்து விட்டு நிர்கதியாக இருக்கும் அந்த குழந்தை அமரனை தனது மகனாகவே வளர்க்கிறார். அப்பாவுக்கு வலது கையாக அமரன் (சிம்பு) மாறுகிறார். ஆனால், சிம்பு மீதே கமல் ஒரு கட்டத்தில் சந்தேகப்பட, அவரை அவரது அண்ணன் நாசர், ஜோஜு ஜார்ஜ், பக்ஸ் உள்ளிட்டோருடன் சேர்ந்து தீர்த்துக் கட்டுகிறார் சிம்பு. ஆனால், உயிரிழக்காமல், தப்பிக்கும் சக்திவேல் சீனத் துறவிகளிடம் தற்காப்பு கலை கற்றுக் கொண்டு வந்து ஒவ்வொருத்தராக பழி வாங்குவது தான் இந்த படத்தின் கதை.

அடித்து துவைக்கப்பட்ட கதை: உலகளவில் ஏகப்பட்ட படங்களில் ஹீரோ வில்லன்களால் கொல்லப்படுவதும், மீண்டும் வந்து அவர்கள் ஒருவரையும் விடாமல் பழிவாங்குவது என்பது அடித்து துவைக்கப்பட்ட கதை. I Spit On Your Grave படத்தில் நாயகியை இப்படித்தான் சித்ரவதை செய்து சிலர் கசக்கி எறிந்து விடுவார்கள். அவர் மீண்டும் எழுந்து வந்து ஒவ்வொரு நபராக கொடூரமாக கொலை செய்வார். அதே பாணியில் எடுக்கப்பட்ட கதையாகவே இந்த படம் உருவாகி இருந்தது.

Screen Doctor This one non linear cut may save Kamal Haasan s Thug Life movie
Photo Credit:

ஓபனிங் இப்படி இருந்தால் காப்பாற்றியிருக்கலாம்: இந்த படத்தில் சிம்பு தான் மெயின் வில்லன் என முடிவு செய்யப்பட்ட நிலையில், அவரை வளர்த்து ஆளாக்கி அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவரால் கொல்லை செய்யப்படுவதும், மீண்டும் உயிர் பிழைத்து வந்து அவரை கொல்வதுமாக கதை சென்றது தான் ரசிகர்களை எந்த இடத்திலும் சுவாரஸ்யப்படுத்தாமல் போனது. ஆரம்ப காட்சியே கோவாவில் சிம்பு - த்ரிஷா இருக்கும் வீடு பாம் வைத்து தகர்க்கப்பட்ட காட்சியுடன் சிம்பு மற்றும் கமல்ஹாசன் இருவரும் ஒவ்வொரு முனையில் இருந்து வெறித்தனமாக கத்தும் காட்சியில் படத்தை ஆரம்பித்து, அதன் பின்னர், சிம்பு எப்படி கமலிடம் வந்து சேர்ந்தார் என்கிற கதைக்குள் சென்றிருந்தால், த்ரிஷா மரணிக்க யார் காரணம், இருவருக்கும் என்ன பகை என்கிற ஆர்வமாவது ரசிகர்களுக்கு பற்றிக் கொண்டிருக்கும்.

Take a Poll

இடைவேளை சீனையும் மாத்தியிருக்கலாம்: இடைவேளை சீனில் சிம்பு மெயின் வில்லனாக இருப்பதை காட்டாமல், அவர் மூளையாக செயல்பட்டது பின்னர் தெரிய வந்திருந்தால், சிம்புவின் வளர்ப்பு மகன் டிராமா இன்னும் கொஞ்சம் நீடித்திருந்தால், அவருடைய நடிப்புக்கும் தீனி போடப்பட்டிருக்கும். மேலும், கமல்ஹாசன் சிம்புவை சந்தேகிக்கும் நேரத்தில் அவர் தனது தங்கையை தேடிப் போயிருந்தார் என்றால், கிளைமேக்ஸில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி அந்தளவுக்கு நடித்தது ரசிகர்களை ரொம்பவே கனெக்ட் செய்திருக்கும். தக் லைஃப் படமும் பிளாக்பஸ்டர் ஆகியிருக்கும். ஆனால், ரயில் வண்டி போல படத்தை ஒரே நீளமாக எடுத்து அப்படியே எடிட் டேபிளில் கோர்த்து வெளியிட்டது தான் படத்திற்கு சிக்கலாக மாறிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X