Actor Suriya: மும்பையில் துவங்கும் கர்ணா பட சூட்டிங்.. படத்தின் ரைட்டர் கொடுத்த அப்டேட்!

சென்னை: நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில் படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கவுள்ளார். படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கவுள்ள நிலையில், அதற்கேற்ப தற்போது தன்னுடைய தோற்றத்தை மாற்றியுள்ளார் சூர்யா.

இந்தப் படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், தற்போது விடுதலை 2 படத்தை இயக்கிவரும் வெற்றிமாறன், அடுத்ததாக வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. பல மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்ட இந்தப் படத்திற்காக டெஸ்ட் சூட் உள்ளிட்டவை நடத்தப்பட்ட நிலையில்,. படம் ரசிகர்களின் அதிகப்படியான கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு முன்னதாகவே பாலிவுட்டில் உருவாகவுள்ள கர்ணா படத்தில் சூர்யா இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Screenplay writer Anand Neelakantan updates about Suriyas Karna movie

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கதை தேர்வுகள் ரசிகர்களை கொண்டாட செய்து வருகின்றன. அவரது சூரரை போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் படங்களின் வித்தியாசமான கேரக்டர்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. இந்நிலையில் தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகள், கோவா உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. படம் ஆகஸ்ட் வெளியீடாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

புறநானூறு படம்: இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் கமிட்டாகியுள்ளார் சூர்யா. படத்தில் சூர்யா கல்லூரி மாணவராக நடிக்கவுள்ள நிலையில், துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். சில தினங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கங்குவா படத்தில் போர் வீரனாக நடித்துள்ள சூர்யா, படத்திற்காக தன்னுடைய உடலை கணிசமாக ஏற்றியிருந்தார். இந்நிலையில் புறநானூறு படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளதால் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகியுள்ளார்.

கர்ணா படம்: இதனிடையே பாலிவுட்டில் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் மகாபாரத கதையின் பின்புலத்தில் கர்ணா என்ற படத்தில் நடிக்க சூர்யா கமிட்டாகியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாக படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆனந்த் நீலகண்டன் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் அப்டேட் தெரிவித்துள்ளார். படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் மும்பையில் துவங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

படத்தின் ரைட்டர் அப்டேட்: தொடர்ந்து மும்பையில் ஒரு வாரம் இந்தப் படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் ஆனந்த் நீலகண்டன் தெரிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் சூர்யா 43 படத்தின் சூட்டிங்கில் சூர்யா இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மிகுந்த பிரம்மாண்டமான அளவில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது மிகவும் துரிதமாக நடந்து வருகிறது. இந்தப் படம் இந்தியில் உருவாகி தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X