ஸ்மிருதி மந்தனாவை ஏமாற்றினாரா காதலன் முச்சால்.. திருமணம் நின்றது ஒருவகையில் நல்லதுதானா?

மும்பை: பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஸ்மிருதி மந்தனாவின் திருமண மேடையிலேயே சரிந்தது, ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலுடனான ஸ்மிருதியின் திருமணம் நவம்பர் 23 அன்று கோவாவில் நடைபெறவிருந்த நிலையில், திருமணத்திற்கு சில மணி நேரங்களே இருந்த போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. இதனால் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இப்படி இருக்கும்போது ஸ்மிருதி மந்தனாவின் காதலர், பலாஷ் முச்சால் அவரை ஏமாற்றிவிட்டார், ஒருவகையில் இவர்களின் திருமணம் நின்றது சரி தான் என்று சிலர் பகிர்ந்து வருகிறார்கள்.

சில மணி நேரங்களில் மகளுக்கு திருமணம் ஆக உள்ளது, இன்னொருவரின் மனைவியாக மகள் மாறுவதற்கு முன்னர், தனது மகளுடன் நடனமாடி மகிழ்ச்சியின் உச்சியில் இருந்த ஸ்ரீனிவாஸ் மந்தனாவின் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர்களின் நடன வீடியோக்களைப் பார்த்த பலரும் யாருக்கும் இப்படி ஒரு சூழல் வந்துவிட கூடாது என்று பதிவிட்டு வருகிறார்கள்.

ஒரு வீடியோவில் அவர் தன் மகள் ஸ்மிருதிக்காக "குத்மாய்" பாடலுக்கு உற்சாகமாக நடனமாடுவதையும், மற்றொரு காணொளியில் "நாரே நாரே" பாடலுக்கு ஆடிப்பாடுவதையும், இன்னொரு காட்சியில் மகளுடன் சேர்ந்து நடனமாடுவதையும் காண முடிகிறது. இந்த மகிழ்ச்சிக் காட்சிகளே இன்று அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளன.ஸ்மிருதி மந்தனா குடும்பத்தாருக்கும் ரசிகர்கள் தங்களது ஆறுதல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Someone on Insta posted ss of Palash DMing her.
byu/itneverhelps inBollyBlindsNGossip

இந்நிலையில் பெண் ஒருவருடன் பலாஷ் முச்சால் சாட் செய்ததாக சில ஸ்கிரீன் ஷாட்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதாவது, அந்த ஸ்கிரீன் ஷாட்களில், முச்சால் அந்த பெண்ணை நீச்சல் குளத்திற்கு அழைப்பதைப் போல் இருப்பதாக உள்ளது. அதேபோல், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தன்னை வந்து சந்திக்கும்படி முச்சால் அந்த பெண்ணை நிர்பந்திப்பதாகவும் பரப்படுகிறது. இந்த ஸ்கிரீன் ஷாட்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்த பேச்சுக்களும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.

Screenshots suggesting Palaash Muchhal allegedly cheated on Smriti Mandhana goes Trending

சிலர் இந்த திருமணம் நின்றது ஒரு வகையில் நல்லதுதான் என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது திருமணம் தொடர்பான பதிவுகளை நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனாலும் ரசிகர்கள், ஸ்மிருதிக்கு முச்சாலின் உண்மை முகம் தெரிந்து விட்டது. அதனால்தான் அவர் தனது திருமணம் தொடர்பான பதிவுகளை நீக்கிவிட்டார் என்று பதிவிட்டு வருகிறார்கள். மேலும் சிலரோ, தனது தந்தைக்கு இப்படி அதனால்தான் அவர் இவ்வாறு, பதிவுகளை நீக்கி உள்ளார். மற்றபடி காதலன் முச்சாலுடனான புகைப்படங்களை நீக்கவில்லை என்பதையும் கவனியுங்கள் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X