நான் ஸ்கிரிப்ட் எழுதாமலா விசாகன் 4 மணிநேரம் கேட்டார்?: நவீன்
சென்னை: ஸ்கிரிப்ட் எழுதாமல் நான் ஓப்பியடிச்சதா சுவர்ணா சார் சொல்வதற்கு விசாகன் பதில் சொன்னால் தான் சரியாக இருக்கும் என்கிறார் இயக்குநர் நவீன்.
2016ம் ஆண்டு விசாகனை வைத்து ஒரு படம் எடுக்குமாறு பிளாஷ் பிலிம்ஸ் சார்பில் திரு.ராகுலன் தன்னை தொடர்பு கொண்டதாக இயக்குநர் நவீன் தெரிவித்துள்ளார். இதையடுத்து நவீனின் ஒயிட் ஷேடோ புரொடக்ஷன்ஸுக்கும், விசாகனின் தாய்மாமா சுவர்ணா சேதுராமனின் பிளாஷ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பவுண்ட் ஸ்கிரிப்ட் தருகிறேன் என்று கூறி ரூ. 45 லட்சம் செக்காகவும், ரூ. 5 லட்சம் ரொக்கமாகவும் நவீன் வாங்கினார். ஆனால் ஸ்கிரிப்ட் கொடுக்காமல் நவீன் ஏமாற்றிவிட்டார் என்று சுவர்ணா சேதுராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
சுவர்ணாவின் புகார் குறித்து நவீன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பத்து மாசமா நான் ஸ்கிரிப்ட் எழுதாம ஓப்பியடிச்சதா சுவர்ணா சேதுராமன் சார் சொல்றார். இதுக்கு நான் பதில் சொல்றதவிட, நாலு மணி நேரம் ஸ்கிரிப்ட் கேட்டுட்டு 'இப்படி ஒரு கதைய ஹாலிவுட்ல கூட நான் பாத்ததில்லனு சொன்ன விசாகன் பதில் சொல்றதுதான் சரியா இருக்கும்.
#AACneedsJustice என்று தெரிவித்துள்ளார்.
நவீன், கயல் ஆனந்தி நடித்துள்ள அலாவுதீனின் அற்புத கேமரா படத்தை வெளியிட நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளார் சுவர்ணா சேதுராமன். ஆனால் இந்த படத்திற்கும், சுவர்ணாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்கிறார் நவீன்.


Click it and Unblock the Notifications











