உருவானது ஸ்க்ரிப்ட் வங்கி.. கோலிவுட்டில் ஆரோக்கிய முயற்சியை தொடங்கிய மதன் கார்க்கி

சென்னை: சிறந்த கதை மற்றும் திரைக்கதையை தயாரிப்பாளர்களுக்கு வழங்குவதற்கு என பாடலாசிரியர் மதன் கார்க்கி மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் இணைந்து Scriptick என்ற கதை, திரைக்கதை வங்கியை தொடங்கியிருக்கின்றனர்.

சினிமா என்பது பலருக்கு கனவு தொழிற்சாலை. சினிமாவில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற கனவோடு ஊரிலிருந்து சென்னைக்கு பேருந்து ஏறுவது காலங்காலமாக தொடரும் ஒன்று. அப்படி பேருந்து ஏறி சென்னை வந்தவர்களில் பலர் வென்றிருக்கிறார், பலர் தோற்றிருக்கிறார்கள், பலர் காணாமல் போயிருக்கிறார்கள்.

கதையும், திரைக்கதையும் முக்கியம்

கதையும், திரைக்கதையும் முக்கியம்

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கதை இருக்கும். சினிமாவில் இயக்குநராக முயற்சிப்பவர்களும் தங்களது வாழ்க்கையிலோ அல்லது மற்றவரது வாழ்க்கையிலோ நடந்த சம்பவங்களின் தாக்கத்திலிருந்துதான் கதையை யோசிப்பர். இருப்பினும் அந்தக் கதை சிறந்ததா, சினிமாவில் வெல்லுமா என்று அவர்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. அதேபோல் கதை எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது திரைக்கதை. ஒரு ரசிகனை சீட்டில் அமரவைப்பதிலும், பாதியிலேயே எழ வைப்பதிலும் திரைக்கதைக்கு முக்கிய பங்கு உண்டு.

கதை, திரைக்கதையோடு அலையும் இளைஞர்கள்

கதை, திரைக்கதையோடு அலையும் இளைஞர்கள்

ஒருவழியாக கதையையும், திரைக்கதையையும் எழுதிவிட்டாலும் சினிமாவுக்கு முயற்சிக்கும் ஒருவரால் பெரும் தயாரிப்பு நிறுவனத்தை அணுகுவது தலையாய காரியம். இதனால் பலர் வாய்ப்பு கிடைக்காமல் இன்னமும் வடபழனியில் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி தயாரிப்பு நிறுவனத்தை அணுகினாலும் ஒன்று அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள் இல்லை தயாரிப்பு நிறுவனம் புதியவர்கள் எழுதியிருக்கும் கதை திரைக்கதையை தங்களுக்கு தெரிந்த அளவில் மட்டும் சிறந்தது என நினைத்துக்கொண்டு ஷூட்டிங் கிளம்பிவிடுகிறது.

ஆனால் ஷூட்டிங் முடிந்து படம் ரிலீஸானதும் சுமாரான கதை, திரைக்கதையால் படம் தோல்வியடைந்து அந்தப் படம் எடுத்தவருக்கு அடுத்து படம் கிடைக்காமலே போய்விடுகிறது. இப்படி பலர் வந்த வேகத்திலேயே திரும்பியிருக்கின்றனர்.

தயாரிப்பு நிறுவனத்தை அணுக ஸ்க்ரிப்டிக் போட்டிருக்கும் பாலம்

தயாரிப்பு நிறுவனத்தை அணுக ஸ்க்ரிப்டிக் போட்டிருக்கும் பாலம்

அதனைப் போக்கும் விதமாக பாடலாசிரியர் மதன் கார்க்கியும், தயாரிப்பாளர் தனஞ்செயனும் ஒரு ஆரோக்கியமான முயற்சியை தொடங்கியிருக்கிறார்கள். அதாவது அவர்கள், ஸ்க்ரிப்டிக் (Scriptick) எனும் கதை, திரைக்கதை வங்கியை தொடங்கியிருக்கிறார்கள்.

திறமையான எழுத்தாளர்களின் திரைக்கதைகளைப் படித்து, அவற்றுள் சிறந்த திரைக்கதைகளை மட்டும் ஒரு குழு மூலம் தேர்ந்தெடுத்து, படப்பிடிப்புக்குத் தயார் நிலையில் அவற்றை தயார் செய்து, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் ஒரு தளம்தான் ஸ்கிர்ப்டிக் ஆகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், திரைக்கதை ஆசிரியர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாக இது செயல்படவிருக்கிறது.

ஸ்க்ரிப்டிக் குழுவில் யார்? யார்?

ஸ்க்ரிப்டிக் குழுவில் யார்? யார்?

இந்தக் குழுவில் மதன் கார்க்கி, தனஞ்செயன் மட்டுமின்றி திரைக்கதை ஆலோசகர் கருந்தேள் ராஜேஷும் இடம்பெற்றிருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியவராக இருந்தாலும் திரைத்துறை மீது இருக்கும் ஆர்வத்தால் தனது வேலையை உதறிவிட்டார். அதுமட்டுமின்றி சூதுகவ்வும், இன்று நேற்று நாளை உள்ளிட்ட படங்களிலும் அவர் பணியாற்றியிருக்கிறார். மேலும் திரைக்கதை பேசலாம் வாங்க என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார்.

இதுவரை ஸ்க்ரிப்டிக்கிற்கு வந்திருக்கும் கதைகள்

இதுவரை ஸ்க்ரிப்டிக்கிற்கு வந்திருக்கும் கதைகள்

ஸ்கிரிப்ட்டிக்கிற்கு இதுவரை 10 ஒரிஜினில் கதைகளும், மூன்று ரீமேக் கதைகளும், இரண்டு வெப் சீரிஸ் கதைகளும் வந்திருக்கின்றன. அவை அனைத்தும் ஷூட்டிங்கிற்கு செல்ல தயார் நிலையில் இருக்கின்றன. அதேபோல், ஒரு கதை விற்பனையும் ஆகியிருக்கிறது.

லாஞ்ச் செய்த இயக்குநர் இமயம்

லாஞ்ச் செய்த இயக்குநர் இமயம்

இந்த ஸ்க்ரிப்டிக்கை இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று தொடங்கிவைத்தார். அதனையடுத்து பேசிய அவர், "இதுபோன்ற முயற்சி எங்கள் காலத்தில் இல்லையே என்று தோன்றுகிறது. இந்த ஆரோக்கியமான முயற்சியை கார்க்கியும், தனஞ்செயனும் தமிழ் சினிமா வளர வேண்டும் என்ற நோக்கத்திற்காக முன்னெடுத்திருக்கிறார்கள். அனைவரும் இந்த கதை, திரைக்கதை வங்கியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

இயக்குநரும், நடிகருமான மனோபாலாவின் பாராட்டு

இயக்குநரும், நடிகருமான மனோபாலாவின் பாராட்டு

இதுகுறித்து இயக்குநரும், நடிகருமான மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில், "மிகச் சிறந்த முயற்சி யாருக்கு எங்க போகணும் தெரியாம இருக்கிறப்போ இந்த மாதிரி ஒரு ரெஜிஸ்ட்ரேஷன் கதைக்காக இருக்கும் போது அதை எல்லா இளைஞர்களும் யூஸ் பண்ணிக்கலாம் சிறப்பு" என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X