Vijay: எஸ்கேப் ஆன விஜய் பவுன்சர்.. விஜய்யை கேள்வி கேட்டதால் தாக்கப்பட்ட பத்திரிகையாளர்!

திருச்சி: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் காரைக்குடியில் தனது பிரச்சாரத்தை முடித்துவிட்டு திருச்சி விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றார். திருச்சி விமான நிலையத்திற்கு வந்தவரை நோக்கி பத்திரிகையாளர்கள் மைக்கை நீட்டி கேள்வி கேட்க முயற்சி செய்தனர். அப்போது விஜய்யை நோக்கி மைக்கை நீட்டிய பத்திரிகையாளர்களை அவரது பவுன்சர்கள் தடுத்தனர். இது தொடர்பாக பவுன்சர்களை நோக்கி பத்திரிகையாளர்கள் ஏன் எங்களை தடுக்கிறீர்கள் எதற்காக தடுக்கிறீர்கள், ஒரு கட்சியின் தலைவரான விஜய்யிடம் பத்திரிகையாளரான நாங்கள் கேள்வி கேட்போம் என்று பேசிக் கொண்டிருக்கையில், ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் விஜயின் பவுன்சர் பத்திரிகையாளரை தாக்கினார்.

பத்திரிகையாளர்களை விஜயின் பவுன்சர் தாக்குவார் என்று யாரும் எதிர்பார்க்காத மற்ற பத்திரிகையாளர்கள் அனைவரும் அந்த பவுன்சரை நோக்கி ஆவேசமாக கத்தினர் மேலும் அவரை நோக்கி சென்றனர். நிலைமையை சுதாரித்துக் கொண்ட காவல் துறை அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவை தடுக்க முயற்சி செய்தனர். பத்திரிகையாளரை தாக்கிய பவுன்சர் அசாமைச் சேர்ந்தவர், அவர் சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பவுன்சர் ஒருவர் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

Scuffle at Trichy Airport Vijay s Bouncer Assaults Journalist Sparks Tension
Photo Credit:

தப்பி ஓட்டம்: இதற்கிடையில் நாங்கள் ஒரு கட்சித் தலைவரை நோக்கி கேள்வி கேட்பது எங்களுடைய வேலை எங்களை எப்படி நீங்கள் தடுத்து தாக்குவீர்கள் என்று பத்திரிகையாளர்கள் தமிழ் தெரிந்த பவுன்சனிடம் பேசிக் கொண்டிருக்கையில் பத்திரிக்கையாளரின் தாக்கிய அந்த பவுன்சர் காரில் ஏறி தப்பிக்க முயற்சி செய்தார். இதனால் திருச்சி விமான நிலையத்தில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டது. தங்களை தாக்கிய பவுன்சரை நோக்கி கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்கள் யாரும் அந்த பவுன்சரை தாக்காதது சலசலப்பை வன்முறையாக மாறவிடாமல் நல்வாய்ப்பாக தடுத்து விட்டது. மேலும் அந்த பவுன்சர் ஏறிய காரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.

ஏற்கனவே பிரச்னை: மேலும் நிலைமையை சுதாரித்துக் கொண்ட காவல்துறை உடனடியாக அந்த பத்திரிகையாளரை அங்கிருந்து அனுப்ப முயற்சிகளை செய்தனர். ஏற்கனவே திருச்சி விமான நிலையத்தில் விஜயின் வருகையின் போது தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்களும் விஜயன் பவுன்சர்களும் இணைந்து வைத்த பேரிகார்டுகள் தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கும் பவுன்சர்களுக்கும் இடையில் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் பத்திரிக்கையாளரை விஜயன் பவுசர்கள் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் காவல் துறையிடம் கோரிக்கை வைத்தனர்.

More from Filmibeat

Read more about: vijay tvk விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X