twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லாம் கைதி எஃப்பெக்ட்.. பல கோடிக்கு விலைபோன தம்பி.. விநியோக உரிமையை வாங்கியது யார் தெரியுமா?

    |

    Recommended Video

    THAMBI - First Look Poster | Karthi | Jyothika | கார்த்தி – ஜோதிகா படத்தின் டைட்டில் வெளியீடு

    சென்னை: கார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி படத்தின் விநியோக உரிமையை எஸ்டிசி பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது.

    'பாபநாசம்' படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் உள்ளிட்டார் நடிப்பில் உருவாகியுள்ள படம் தம்பி. 'பாபநாசம்' படத்தை போன்றே இதுவும் ஒரு பேமிலி திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது.

    SDC pictures acquires Thambi distribution rights

    இப்படத்தில் கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா நடித்துள்ளார். அப்பா அம்மாவாக சத்யராஜ், சீதா நடித்துள்ளனர். மேலும் நிகிலா விமல், இளவரசு, பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் உள்ளிட்டாரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

    இது அன்பு சாம்ராஜ்யம்.. இனி தலைவரின் தர்பார் ஆரம்பம்.. 6 மில்லியன் வியூஸ் தாண்டிய 'சும்மா கிழி'!இது அன்பு சாம்ராஜ்யம்.. இனி தலைவரின் தர்பார் ஆரம்பம்.. 6 மில்லியன் வியூஸ் தாண்டிய 'சும்மா கிழி'!

    கோவிந்த் வசந்தா இசையில் பேக்ரவுண்ட் ஸ்கோர் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. வரும் 30ம் தேதி படத்தின் இசை வெளியிடப்பட உள்ளது. டிசம்பர் 20ம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது.

    இந்நிலையில் அப்படத்தின் விநியோக உரிமையை எஸ்டிசி பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் சூப்பர் ஹிட்டானதால், தம்பி திரைப்படத்தை பல கோடி ரூபாய் கொடுத்து எஸ்டிசி பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.

    இந்நிறுவனம் இதற்கு முன் தொரட்டி, திட்டம் போட்டு திருடுற கூட்டம், காவியன் ஆகிய படங்களை வெளியிட்டுள்ளனர். மேலும் சேரன் நடிப்பில் உருவாகியுள்ள "ராஜாவுக்கு செக்", திரிஷாவின் "கர்ஜனை" படங்களை வெளியிட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The SDC pictures have accuired the distribution rights of Karthi, Jyothika starring Thambi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X