Oscar 2025: 5 விருதுகளை தட்டித்தூக்கிய அனோரா.. விருதை பாலியல் தொழிலாளிகளுக்கு அர்ப்பணித்த இயக்குநர்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: அகாடமி விருதுகள் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இதில், சிறந்த படைப்புகள், கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், 3 ஆஸ்கர் விருதுகளை 'அனோரா' படம் வென்றது. இப்படத்தின் இயக்குநர் தனக்கு கிடைத்த விருதை பாலியல் தொழிலாளிகளுக்கு அர்ப்பணித்தார்.

பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை பற்றிய திரைப்படமான அனோரா, ஷான் பேக்கர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தில் மார்க் எடேல்டின், யுரிய் போரிசவ், லுனா சோவியா மரிடானா , கரேன் கராகுலியன், வச்சே டோவ்மாஸ்யன், அலெக்ஸி செரிப்ரியாகோவ் ஆகியோர் நடித்திருந்தார். கடந்த ஆண்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இத்திரைப்படம் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் என ஆறு பிரிவுகளில் ஆஸ்கர் நாமினேஷனில் இடம் பெற்றது.
5 விருதுகள்: இதில், இத்திரைப்படம் சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த எடிட்டிங் ஆகிய இரண்டு விருதுகளை ஷான் பேக்கர் பெற்றார். மேலும், சிறந்த துணை நடிகருக்கான விருதை யூரா போரிசோவும், சிறந்த நடிகை விருதை மைக்கி மேடிசன், மேலும் அனோரா சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. மொத்தம் அனோரா 5 விருதுகளை தட்டித்தூக்கி உள்ளது.
பாலியல் தொழிலாளிகளுக்கு நன்றி: ஆஸ்கர் விருதை பெற்ற ஷான் பேக்கர், மேடையில் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அதில், இந்த உரிய விருதை எனக்கு பெற்றுக்கொடுத்த பாலியல் தொழிலாளர்களின் சமூகத்திற்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். பாலியல் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக, தங்கள் வாழ்க்கை அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்.அதன் விளைவு தான் இந்த படம், இந்த படத்தின் மூலம் என் மரியாதையை அவர்களுக்கு தெரிவித்துக்கொண்டு இந்த விருதை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்றார்.
பல விருதுகளை வென்றது: கடந்த ஆண்டு வெளியான அனோரா படம் பிப்ரவரியில் WGA விருதையும், IndieWire விருது, கடந்த மே மாதம் கேன்ஸில் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது, அதுமட்டுமில்லாமல் BAFTA திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை மைக்கி மேடிசன் பெற்றோர். அப்போது பேசியஅவர், தனது வெற்றியை பாலியல் தொழிலாளிகளுடன் பகிர்ந்து கொண்ட அவர், உங்கள் நான் மரியாதையாகவும், மரியாதைக்கு தகுதியானவர்களாகவும் பார்க்கிறேன். நான் எப்பொழுதும் உங்களுடன் நண்பனாகவும் கூட்டாளியாகவும் இருப்பேன், மற்றவர்களும் அவர்களுடன் அப்படியே பழக வேண்டும் என்று பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











