twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கடல் அழிந்தால்… நாமும் அழிவோம்…சீஸ்பைரஸி படம் பார்த்த காஜல் வேதனை !

    |

    சென்னை : நடிகை காஜல் அகர்வால் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான சீஸ்பைரஸி படத்தை பார்த்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக கூறியுள்ளார்.

    கடல்களைப் பாதுகாப்பதற்கு ஒரே வழி கடல் உயிரினங்களை சாப்பிடுவதை நிறுத்துவது மட்டுமே.

    'கர்ணன்' நமக்கான படம்.. இந்த மண்ணின் கதை.. எம் மக்களின் வதை.. பிரபல இயக்குநர் புகழாரம்! 'கர்ணன்' நமக்கான படம்.. இந்த மண்ணின் கதை.. எம் மக்களின் வதை.. பிரபல இயக்குநர் புகழாரம்!

    நான் நீண்ட ஆண்டுகளாக தாவரங்கள் சார்ந்த உணவு வகைகளையே உண்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

    இதயத்தை நொறுங்கியது

    இதயத்தை நொறுங்கியது

    நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ள சீஸ்பைரஸி படம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காஜல் அகர்வால், சீஸ்பைரஸி படத்தை தற்போதுதான் பார்த்தேன். அது என்னுடைய இதயத்தை நொறுங்கச் செய்துள்ளது. மீன் பிடிநிறுவனங்களுக்கு அதீத சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாரும் குரல் எழுப்பாதது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

    கட்டுப்பாடு இல்லை

    கட்டுப்பாடு இல்லை

    ஆழ்கடலில் நடப்பவற்றைக் கட்டுப்படுத்த எந்தச் சட்டங்களும், அரசாங்க கட்டுப்பாடுகளும் இல்லை. நாம் சாப்பிடும் கடல் உணவு எப்படி கிடைக்கிறது எனத் தெரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியமான ஒன்று. தேவையான அளவு மட்டுமே மீன்பிடித்தல் என்ற ஒன்று இல்லவே இல்லை. இது மிகவும் வருத்தமளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

    சுத்தமான மீன்கள் இல்லை

    கடல்களைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி கடல் உயிரினங்களை சாப்பிடுவதை நிறுத்துவது மட்டுமே. நாம் ஏன் ஈயம், பாதரசம், மைக்ரோ பிளாஸ்டிக் போன்ற பொருட்களை உண்ண வேண்டும்? அனைத்துவிதமான தொழிற்சாலைக் கழிவுகளும் சென்று கலக்கும் கடலில், சுத்தமான மீன்கள் என எதுவும் இல்லை.

    கடல் அழிந்தால், நாமும் அழிவோம்

    கடல் அழிந்தால், நாமும் அழிவோம்

    நான் பல வருடங்களாக தாவரங்கள் சார்ந்த உணவு வகைகளையே உண்கிறேன். இதனால் ஊட்டச்சத்து தொடர்பான கவலைகளோ, குறைபாடுகளோ எனக்கு இல்லை. நமது சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் செய்ய வேண்டியது பற்றிய நிலைபாட்டை தற்போது நாம் எடுக்க வேண்டும். நம் கடல் அழிந்தால், நாமும் அழிவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Seaspiracy : Kajal Aggarwal Expressed Their Feelings On Eating Sea Tuna Fish
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X