Don't Miss!
- News அள்ள அள்ள தங்கம்.. பளபளன்னு ஜொலித்த நகைகள்.. திருவண்ணாமலை பேங்க்கில் நுழைந்த ஆபீசர்ஸ்.. அடக்கடவுளே
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
செபாஸ்டியன் பி.சி. 524 படத்தின் ஒரு சீன் வெளியானது.. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பு!
சென்னை: கிரண் அப்பாவரம் நடிக்கும் 'செபாஸ்டியன் பி.சி. 524' படத்தின் ஒரு காட்சியை லாவண்யா திரிபாதி வெளியிட்டார்.
இளம் நடிகர் கிரண் அப்பாவரம் தனது முதல் படமான 'ராஜா வாரு ராணி வாரு' படத்தின் மூலம் பார்வையாளர்களை ஈர்த்து, திரைத்துறையின் கவனத்தை பெற்றவர்.
அப்படம் அசலான கிராமத்து கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது. அவரது இரண்டாவது படமான 'எஸ்ஆர் கல்யாணமண்டபம்' ஹிட் பாடல்களால் பிரபலமானது. தற்போது அவரது மூன்றாவது படமான 'செபாஸ்டியன் பி.சி. 524' பார்வையாளர்களின் அன்பை பெற தயாராகிவிட்டது.
சூர்யா ஜோடி? 'அடுத்த தமிழ்ப் படத்தில் கமிட் ஆகிட்டேன், ஆனா..' சஸ்பென்ஸ் வைக்கிறார் நடிகை ராஷ்மிகா!
பாலாஜி சய்யபுரெட்டி
ஒரு அசலான கதையுடன் அப்படம் வந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் ஒரு காட்சியை நடிகை லாவண்யா திரிபாதி வெளியிட்டுள்ளார்.பாலாஜி சய்யபுரெட்டி இயக்கும் இப்படத்தில் கிரண் நாயகனாக நடிக்கிறார். ப்ரமோத் மற்றும் ராஜு தயாரிக்கும் இப்படம் மாலை கண்நோயைப் பற்றியது.
தனித்துவமான முறையில்
வெளியிடப்பட்ட அந்த காட்சியில் ஒரு தேவாலயம், இயேசுவின் புகைப்படம், மற்றும் படத்தின் ஹீரோ ஆகிய விஷயங்கள் தனித்துவமான முறையில் காட்டப்படுகின்றன. சுவாரஸ்யமான பின்னணி இசையுடன், ‘ஒரு தாயின் நீதிக்காக ஒரு தாயின் சத்தியம்' மற்றும் ‘உண்மை என்றும் மறைவதில்லை' உள்ளிட்ட வரிகள் காட்சியமைப்புடன் பொருந்திப் போகிறது.
ஒரு கிறிஸ்துவராக
அந்த காட்சியின் மூலம், நாயகன் இரண்டு விதமான தோற்றங்களில் வருகிறார் என்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒருவர் தாடியுடன் தோன்றும் அதே நேரத்தில் மற்றொருவர் க்ளீன் ஷேவ் செய்த காவல் அதிகாரியாக வருகிறார். இப்படத்தின் கிரண் கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்த ஒரு கிறிஸ்துவராக நடிக்கிறார். அதனால்தான் காட்சியின் முடிவில் ‘பிறந்தநாள் வாழ்த்துகள், செபா' என்ற வாக்கியம் இடம்பெறுகிறது.
ஜிப்ரான் இசை
இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். சாஹோ படத்துக்கு பிறகு அவர் இசையமைக்கும் நேரடி தெலுங்கு படம் இது. கதை மிகவும் பிடித்துப் போனதால் இப்படத்துக்கு அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.கிரண் அப்பாவரம், நம்ரதா தரேகர், கோமலி பிரசாத், ஸ்ரீகாந்த் ஐயங்கார், சூர்யா, ரோஹினி ரகுவரன், ஆதர்ஷ் பாலகிருஷ்ணா போன்ற பல நடிகர்களின் கூட்டணி முயற்ச்சி இந்த படம்
பலம் கொண்ட கூட்டணி
எழுத்து, இயக்கம்: பாலாஜி சய்யபுரெட்டி, ஒளிப்பதிவு: ராஜ் கே நல்லி, கலை இயக்கம்: கிரண் மாமிடி, எடிட்டிங்: விப்லவ் நிஷாதம், இசை: ஜிப்ரான், தயாரிப்பு: எலைட் எண்டெர்டைன்மெண்ட், இணை தயாரிப்பு: சித்தா ரெட்டி ,
தயாரிப்பாளர்கள்: ப்ரமோத், ராஜு, டிஜிட்டல் உரிமை: டிக்கெட் ஃபாக்டரி , விளம்பரம்: சவான் பிரசாத், டிஐ: சுரேஷ் ரவி, ஒலி: சிங்க் சினிமாஸ் சச்சின் சுதாகரன் என்று ஒரு பலம் கொண்ட கூட்டணி இந்த படத்தின் வெற்றிக்காக உழைக்கிறது. 2021ஆம் ஆண்டு இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி