அதுல விவசாயி லுக், இப்ப எப்படியோ? இன்னைக்கு வருதாம்ல ஜெயம் ரவியின் 'பூமி' பட 2 வது லுக்

By

சென்னை: ஜெயம் ரவி நடிக்கும் பூமி படத்தின் செகண்ட் லுக் போஸ்டர், இன்று மாலை வெளியாகிறது.

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துவருகிறார் ஜெயம் ரவி. தாய்லாந்தில் நடந்த இதன் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கிறது.

இதற்கிடையே அவர் நடித்துள்ள, பூமி படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று மாலை வெளியிடுகிறது. இந்தப் படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். இவர் ஜெயம் ரவியின் மாமியார்.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

ஜெயம் ரவியின் 25-வது படமான இதை, லக்‌ஷமண் இயக்குகிறார். இவர், ஜெயம் ரவி நடித்த 'ரோமியோ ஜூலியட்', 'போகன்' படங்களை இயக்கியவர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த நவம்பர் மாதம் வெளியானது.

விவசாய கதை

விவசாய கதை

விவசாயத்தை மையப்படுத்திய படம் என்பதால், விவசாயிகளுக்கு நடுவில் ஜெயம் ரவி நிற்பது போல் அந்த போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது. அது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

நிதி அகர்வால்

நிதி அகர்வால்

இந்தப் படத்தில் ஹீரோயினாக, நிதி அகர்வால் நடிக்கிறார். இவர் இந்தியில், முன்னா மைக்கேல் என்ற படத்திலும் தெலுங்கில், சவ்யாசாச்சி, மிஸ்டர் மஜ்னு, ஐஸ்மார்ட் சங்கர் படத்திலும் நடித்துள்ளார்.

செகண்ட் லுக்

செகண்ட் லுக்

இமான் இசை அமைக்கிறார். டட்லி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இதைப் படக்குழு அறிவித்துள்ளது. இதில் ஜெயம் ரவியின் லுக்கை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X