சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறதா?
பெங்களூர் : ரஜினி நடித்த படங்களில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட படம் 'சந்திரமுகி'.
ரஜினியுடன், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் என பலர் நடித்திருந்த இப்படம் வசூலில் கலக்கியதோடு ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பையும் பெற்றது.
தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இயக்குனர் பி.வாசு சந்திரமுகி படத்தை கன்னடத்திலும் ரீமேக் செய்து அதிலும் வெற்றி பெற்றார்.

ஆப்தமித்ரா :
இயக்குனர் பி. வாசு சந்திரமுகி படத்தை கன்னடத்தில் நடிகர் விஷ்ணுவர்தனை ஹீரோவாக வைத்து 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் ரீமேக் செய்து அதில் வெற்றியும் பெற்றார்.

ஆப்தரக்ஷகா :
'ஆப்தமித்ரா' படத்தின் சீக்குவலாக 'ஆப்தரக்ஷகா' படம் வெளியாகி அதுவும் சுமாரான வெற்றியைப் பெற்றது. இப்போது இந்தப் படங்களின் தொடர்ச்சியாக மற்றொரு பாகம் தயாராகவிருக்கிறது.

ஆபதமித்ரா 2 :
தற்போது கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' படத்தின் இரண்டாம் பாக கதை தயாராகி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அரண்மனை ரீமேக் :
தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான 'அரண்மனை' படத்தின் ரீமேக்தான் 'ஆப்தமித்ரா 2' படம் எனக் கூறப்படுகிறது. மற்றபடி படத்தில் நடிப்பவர்கள் யார் யார் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











