தமிழ் சினிமாவும் ரகசிய திருமணமும்!!

By Mayura Akilan

பிரபல நடிகர், நடிகைகளைப் பற்றி ரகசிய திருமணம் என்று கிசுகிசுவோ வதந்தியோ பரப்புவதுதான் ஊடகங்களின் சுவாரஸ்யம்.

சித்தார்த் - சமந்தா, ராணா - திரிஷா ஜோடி தொடங்கி விஷால்க்கு ரகசிய திருமணம் வரை லேட்டஸ்ட் ஆக வதந்தி பரவிக்கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் காதலை சீக்ரெட்ஆக வைத்திருந்து திடீரென்று ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகர், நடிகையர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களைப் பற்றி கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்களேன்.

பார்த்திபன் - சீதா

பார்த்திபன் - சீதா

ஆண்பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சீதா. பார்த்திபன் நடித்து இயக்கிய புதிய பாதை படத்தில் நாயகியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பெற்றோர் எதிர்ப்பையும் மீறி இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி குழந்தைகள் பிறந்த சில ஆண்டுகளிலேயே பார்த்திபன் - சீதா தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்தும் செய்து கொண்டனர்.

தேவயானி-ராஜகுமாரன்

தேவயானி-ராஜகுமாரன்

தேவயானியும், இயக்குனர் ராஜகுமாரன் அவர்களும் காதலித்து வந்தனர் ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டை விட்டு ஓடிப்போய் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகை காவேரி

நடிகை காவேரி

வைகாசி பொறந்தாச்சு' படத்தில் நடிகர் பிரசாந்துடன் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காவேரி. ஆங்கிலோ இந்திய பெண்ணான இவரது உண்மையான பெயர் ஏஞ்சலா. சினிமாவைத் தொடர்ந்து சீரியலில் நடித்த காவேரி சினிமா ஒளிப்பதிவாளர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார். அந்த வாழ்க்கை சிக்கலில் முடியவே விவாகாரத்தும் ஆனது. இரண்டாம் முறையாக கடந்த ஜூலை மாதம் ராகேஷ் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் விமல்

நடிகர் விமல்

விமலுக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த அட்சயா என்ற பிரியதர்சினிக்கும் காதல் இருந்து வந்தது. விமல்-பிரியதர்சினி காதலை, பிரியதர்சினியின் குடும்பத்தினர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விமல்-பிரியதர்சினி இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சுவாமிமலை முருகன் கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.

நடிகை அனன்யா – ஆஞ்சநேயன்

நடிகை அனன்யா – ஆஞ்சநேயன்

நாடோடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனன்யா. இவருக்கும் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயனுக்கும் காதல் மலர்ந்தது. இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு பிப்ரவரி 3-ந்தேதி திருச்சசூரில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் ஆஞ்சநேயன் ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் அனன்யா பெற்றோருக்கு தெரிய வந்ததை அடுத்து திருமணத்தை ரத்து செய்தனர். அனன்யாவையும் வீட்டில் சிறை வைத்தனர். ஆனாலும் அனன்யா வீட்டை விட்டு ஓடிப்போய் ஆஞ்சநேயனை திருமணம் செய்து கொண்டார்.

தர்மேந்திரா – ஹேமாமாலினி

தர்மேந்திரா – ஹேமாமாலினி

பாலிவுட் ஹாட் ஜோடியாக இருந்த தர்மேந்திராவும், ஹேமமாலினியும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். தர்மேந்திரா ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு இரண்டாம்தாரமாக வாழ்க்கைப் பட்டார் ஹேமா.

ஸ்ரீதேவி – போனிகபூர்

ஸ்ரீதேவி – போனிகபூர்

தமிழ், இந்தியில் சூப்பர் ஸ்டாரினியாக வலம் வந்த ஸ்ரீதேவி திடீரென்று போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். போனிகபூரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்தான்.

சயீப் அலிகான்- அம்ரிதா சிங்

சயீப் அலிகான்- அம்ரிதா சிங்

தன்னைவிட 12 வது மூத்தவரான அம்ரிதாசிங்கை காதலித்தார் சயீப். இந்த காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் எதிர்ப்பை மீறி ரகசிய திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X