வனிதாவின் 3 வது கணவர் பீட்டர் பால், மனைவி என்று காட்டிய பெண் யார்..? அசோசியேட் அதிர்ச்சி தகவல்!

By

சென்னை: பீட்டர் பால் தனது மனைவி என்று தங்களிடம் வேறொரு பெண்ணைக் காட்டியதாக, அசோசியேட் இயக்குனர் ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

வீட்டு சண்டை வீதிக்கு வந்தது • Lakshmi யை ஓடவிட்ட வனிதா

நடிகை வனிதா விஜயகுமாரின் பிரச்னை கொரோனாவை மிஞ்சும் விதமாக பரபரப்பில் இருக்கிறது.

இவர், பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டதுதான் பிரச்னைக்கு காரணம்.

மூன்றாவது திருமணம்

மூன்றாவது திருமணம்

கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட வனிதா, 2007 ஆம் வருடம் அவரை விவாகரத்து செய்தார். பிறகு ஆனந்த் ஜெயராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா, 2012 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். 8 ஆண்டுகள் கழித்து கடந்த மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எலிசபெத் ஹெலன்

எலிசபெத் ஹெலன்

பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் 2 வது திருமணம் செய்துகொண்டதாக புகார் கூறியிருந்தார். இது சமூக வலைதளத்தில் பரபரப்பானது. பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக பலர் கருத்துத் தெரிவித்தனர். சினிமா தயாரிப்பாளர் ரவீந்திரன், யூடியூப் பிரபலம் சூரியா தேவி ஆகியோர் வனிதாவின் திருமணம் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தனர்.

அசோசியேட் இயக்குனர்

அசோசியேட் இயக்குனர்

இந்நிலையில், சூரியா தேவி மீது அவதூறாகப் பேசினார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை வனிதா, போரூர் காவல் நிலையத்தில், புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திரைப்பட அசோசியேட் இயக்குனர் பிரசாந்த் கிருபாகரன் என்பவர், பீட்டர்பால் குறித்து தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ள தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சயின்ஸ் பிக்சன்

சயின்ஸ் பிக்சன்

அவரது நீண்ட பதில், பீட்டர்பால் வேறொரு பெண்ணைதான் தனது மனைவி என்று தங்களிடம் அறிமுகம் செய்ததாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: 'ஒரு சயின்ஸ் பிக்சன் படத்தின் டிஸ்கஷனில் நாங்கள் இருந்தோம். அப்போது பீட்டர்பாலுக்கு அடிக்கடி போன் வந்து கொண்டிருக்கும். பீட்டர்பால் அது தனது மனைவி என்றும், இந்தப் படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்றும் எங்களிடம் சொன்னார்.

இவர்தான் மனைவி

இவர்தான் மனைவி

மேலும் எங்களுடன் செல்பி எடுத்து அவருக்கு அனுப்புவார். நாங்கள் அவரை பார்க்க ஆசைப்பட்டோம். ஒரு நாள் அவரிஅம் கேட்டபோது, மனைவி என்று சொன்னவரின் புகைப்படத்தைக் காண்பித்தார். இவர்தான் எனது மனைவி என்று சொன்னார். ஆனால், பீட்டர்பாலுக்கு எதிராக இப்போது போலீஸில் புகார் கொடுத்துள்ள பெண் அவரல்ல. அவர் வேறொருவராக இருந்தார் என்று கூறியுள்ளார். அசோஷியேட் இயக்குனர் ஒருவர் இப்படி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X