ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு மும்பை 'நிழலுலக தாதா' ரவி பூஜாரி கொலை மிரட்டல்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, மாபியா கும்பலை சேர்ந்த ரவி பூஜாரி தொலைபேசி வழியே தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகப் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சமீபகாலமாக பாலிவுட் பிரபலங்கள் சிலர் மாபியா கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகி வருகின்றனர். அந்தவகையில், தற்போது பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு மாபியா கும்பலால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மிரட்டல் தொடர்பாக ராஜ் குந்த்ரா மும்பைப் போலீசில் புகார் அளித்துள்ளார்.

மிரட்டல்...
அப்புகாரில் மாபியா கும்பலைச் சேர்ந்த ரவி பூஜாரி, ‘தனக்கு ரூ.3 கோடி கொடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளதாக' அவர் தெரிவித்துள்ளார்.

கூடுதல் பாதுகாப்பு...
புகாரின் அடிப்படையில், ராஜ் குந்த்ரா வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை போலீசார், நடிகை ஷில்பா மற்றும் அவரது கணவர் ராஜ் ஆகியோருக்கு கூடுதல் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

விசாரணை...
மேலும், தொலைபேசி மிரட்டல் தொடர்பாக மும்பை குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடரும் மிரட்டல்கள்...
தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் மாபியா கும்பலால் மிரட்டப்பட்டு வருவது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











