மூக்கறுக்கணும், தலையை வெட்டணும்: மிரட்டலால் தீபிகாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
மும்பை: பத்மாவதி பிரச்சனையால் தீபிகா படுகோனேவுக்கு மும்பை போலீசார் சிறப்பு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ள படம் பத்மாவதி. ராணி பத்மினியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.
இந்த படத்திற்கு ராஜ்புட் கர்னி சேவா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தீபிகா
ராஜஸ்தான் மாநிலத்தின் பெருமையான பெண்ணான ராணி பத்மினியை அவமதித்து படம் எடுத்த பன்சாலி அதில் நடித்த தீபிகா ஆகியோரின் தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூ. 5 கோடி அளிக்கப்படும் என்று அகில பாரதிய ஷத்ரிய யுவ மகாசபாவின் தேசிய தலைவர் தாகூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளார்.

மிரட்டல்
ராஜ்புட் சமூகத்தினர் பெண்ணுக்கு எதிராக கை ஓங்க மாட்டோம். ஆனால் தேவைப்பட்டால் தீபிகாவின் மூக்கை அறுப்போம் என்று ராஜ்புட் கர்னி சேவா அமைப்பு மிரட்டியுள்ளது.

ரிலீஸ்
யார் என்ன சொன்னாலும் திட்டமிட்டபடி படம் டிசம்பர் 1ம் தேதி ரிலீஸாகும் என்று தீபிகா தில்லாக தெரிவித்துள்ளார். மேலும் பத்மாவதிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் நாடு பின்னோக்கி செல்கிறது என்று கூறியுள்ளார்.

பாதுகாப்பு
இரண்டு அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து தீபிகாவின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











