Vijay: விஜய் வாகனத்தில் ஏற முயன்ற ரசிகர்.. பூட்ஸ் காலால் எட்டி உதைத்த பவுன்சர்.. பகீர் சம்பவம்
மதுரை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் காரைக்குடியில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மதுரை வழியாக காரைக்குடிக்குச் சென்றார். அப்போது மதுரையில் உள்ள டோல் கேட் ஒன்றில் விஜய்யை வரவேற்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்தனர். விஜய் வாகனம் வந்ததைக் கண்டதும் உற்சாக மிகுதியில், விஜய் ரசிகர்கள் அவரது வாகனத்தை நோக்கி ஓடினர். சிலர் அவரது வாகனத்திற்கு பூக்களை தூவி விஜய்யை வரவேற்று மகிழ்ந்தனர். அதேபோல், ரசிகர்கள் சிலர் அவரது வாகனத்தின் பக்கவாட்டில் உள்ள கம்பியைப் பிடித்து வாகனத்தில் தொத்திக் கொண்டாவது விஜய்யைப் பார்த்துவிடவேண்டும் என்று ஆர்வத்தில் நடந்து கொண்டனர்.

இதைக் கொஞ்சமும் எதிர் பார்க்காத விஜய்யின் பாதுகாவலர்களில் ஒருவர், அந்த ரசிகரை வாகனத்தின் கம்பியில் இருந்து கையை எடுக்கச் சொன்னார். மேலும் அவரது கையை தனது கையால் எடுத்துவிடவும் முயற்சித்தார். கடைசியாக பூட்ஸ் அணிந்த தனது காலால் எட்டி எட்டி மிதித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே நடிகர் விஜய் பாண்டிச் சேரியில் பிரசாரம் செய்யச் சென்றபோது, அவரது பாதுகாப்பிற்காக வந்திருந்த பவுன்சர்களில் ஒருவர், விஜய் ரசிகரை கிழே தள்ளிவிட்டார். இது விஜய் கண்முன்னே நடந்தது. இது மட்டுமல்லால, விஜய் இதைப் பார்த்ததுமே, அந்த பவுன்சரை மிகவும் கடுமையாக திட்டினார். இது தொடர்பான வீடியோக்களுமே இணையத்தில் வேகமாக பரவியது. இப்படி இருக்கையில் அவரது பாதுகாவலர் விஜய்யின் ரசிகரை பூட்ஸ் கால்களால் எட்டி உதைத்த வீடியோவைப் விஜய் பார்த்தால் அந்த பவுன்சரைக் கண்டிப்பாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











