தன் மீது பாம்பை வீசிய நபரை சன்னி லியோன் எப்படி பழிவாங்கினார் தெரியுமா?
Recommended Video

மும்பை: தன் மீது பாம்பை வீசியவரை சன்னி லியோன் பழிவாங்கியுள்ளார்.
சன்னி லியோன் படங்கள், விளம்பர படங்கள் என்று பிசியாக உள்ளார். அதே சமயம் மகள் நிஷாவுடன் நேரம் செலவிடத் தவறுவதும் இல்லை. இதற்கிடையே அவர் சமூக வலைதளங்களிலும் ஆக்ட்டிவாக உள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு விஷயத்தை சன்னி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
விளையாட்டு
செட்டில் அமர்ந்து ஸ்க்ரிப்ட் படித்துக் கொண்டிருந்த சன்னி லியோன் மீது ஒருவர் பாம்பை வீச அவர் பதறியடித்து அலறிக் கொண்டு ஓடுகிறார். இந்த வீடியோவை சன்னி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

டீம்
சன்னி மீது பாம்பை வீசியவர் அவர் அணியை சேர்ந்த ஒருத்தர் தான். செட்டில் சன்னியுடன் சும்மா விளையாடுவதற்காக இப்படி செய்துள்ளார் அந்த நபர்.
கேக்
தன் மீது பாம்பை வீசி பயமுறுத்திய நபரை சன்னி லியோன் பழிவாங்கிவிட்டார். இரண்டு சாக்லேட் கேக்குகளை அந்த நபரின் முகத்தில் வீசி பழிவாங்கிவிட்டார் சன்னி. எப்பா, இதுக்கு பெயர் பழிவாங்குவதா சன்னி?

நெட்டிசன்ஸ்
சன்னி லியோன் மீது பாம்பை வீசிய வீடியோ மற்றும் அவர் பழிவாங்கிய வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை கலாய்த்து மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











