இந்த ரசிகர்கள் விஜய்யை கொண்டாடறாங்களா.. கலாய்க்கிறாங்களா?
விஜய் மக்கள் இயக்க வெறியர்கள் என்ற பெயரில் பேஸ்புக்கில் ஒரு பக்கத்தை ஆரம்பித்துள்ள விஜய் ரசிகர்கள், அவரை கொண்டாடுவதாகக் கூறி வெளியிட்டிருக்கும் கருத்துகளுக்கு இணையான காமெடியை விஜய் படங்களில் கூடப் பார்க்க முடியாது!
இதோ சாம்பிளுக்கு சில..

இதோ சாம்பிளுக்கு சில..
2 நொடிகள் போதுமே தலைவா.. மோடியையும் உன் தீவிர வெறியன் ஆக ஆக்குவதற்கு!
அந்த பிரதமரே எங்க பக்கம் ! இனி எந்த கொம்பனாலும் எங்க அண்ணா நிழலை கூட அசைக்க முடியாது!
-இப்படி ஒரு நிலைத் தகவல்.

அடுத்ததுதான் காமெடியின் உச்சம்...
"ராஜபக்சே உன்னதமான ஒரு மனிதன். தனது நாட்டுக்காகவும், தனது இனத்துக்காகவும் போராடுகிறார். அவர் தரப்பில் நீங்கள் இருந்தாலும் அதனை தான் செய்வீர்கள்.
ராஜபக்சே அவர்களே நீங்கள் கவலைப்படாதீர். உங்களுக்காக உயிர் கொடுக்க "விஜய் மக்கள் இயக்கம்" செயல்படுவோம். உங்களது படம் எந்த தடையும் இன்றி வெளிவரும்".

சாத்தானும் நீயே
நீயே தெய்வம்... நீயே சாத்தானாக இப்பூவுலகில் நீ விளங்குகிறாய் !
தன் பக்தர்களுக்கு நீ இறைவன் ! தன் எதிரிகளுக்கு நீ சாத்தான் ! கடவுளிடம் மோது ! விஜயிடம் மோதாதே!

என்னா பாசம்...
இக்கலிகாலத்தில் தன்னுடன் நடிக்கும் சக பெண்களை ஒரு இரவுக்கு வர சொல்லும் நடிகர்கள் மத்தியில் நீ "செந்தாமரை" பூ போல உன்னுடன் நடிக்கும் ஐட்டம் டான்சரையும் தன் உடன் பிறவா தங்கை போலவே எண்ணி அவர்களை உன் பாச பிணைப்பால் கட்டி போடுகிறாய்.. எந்த நடிகருக்கு வரும் இந்நற்பண்பு?

'ஆச்சி?'
தேர்தல் என்று வரும் பொழுது தான் அரசியல்வாதிகளுக்கு எங்கள் தலைவனின் முகம் நியாபகம் வரும் போலும். இனி நாங்கள் ஏமாறப் போவதில்லை...." என்று போகும் அந்த நிலைத் தகவலின் அடுத்த மூன்று வரிகளை இங்கே எழுதினால் எவ்ளோ தப்புத் தப்பா எழுதறான் பார் என்பீர்கள். அதனால் ஸ்க்ரீன்ஷாட்டைப் படித்துக் கொள்ளுங்கள்!
இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள அத்தனை படங்களும், விஜய் வெறியர்களுக்கு சொந்தமானவையே!!


Click it and Unblock the Notifications











