»   »  கோஹ்லி-அனுஷ்காவுக்கு 'வில்லங்க பரிசு' கொடுக்க விரும்பும் சர்ச்சை நடிகை

கோஹ்லி-அனுஷ்காவுக்கு 'வில்லங்க பரிசு' கொடுக்க விரும்பும் சர்ச்சை நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கோஹ்லி- அனுஷ்காவுக்கு ஒரு பொருளை பரிசளிக்க விரும்புகிறார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11ம் தேதி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். நாளை மறுநாள் மும்பையில் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது.

முன்னதாக டெல்லியிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிலையில் கோஹ்லி-அனுஷ்கா குறித்து பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கூறியிருப்பதாவது,

அனுஷ்கா

அனுஷ்கா

விராட் கோஹ்லி, அனுஷ்கா சர்மா க்யூட் தம்பதி. அண்மையில் திருமணம் செய்து கொண்ட அவர்கள் பாதுகாப்பாக உறவு கொள்ள நான் விளம்பரம் செய்யும் ஆணுறைகளை பரிசளிக்க விரும்புகிறேன்.

ஆணுறை

ஆணுறை

கோஹ்லி, அனுஷ்கா அந்த ஆணுறையை பயன்படுத்திவிட்டு தங்களின் கருத்தை தெரிவித்தால் நன்றாக இருக்கும். நான் விளம்பரம் செய்யும் ஆணுறைகள் ஸ்பெஷல் ஆகும்.

பல வகை

பல வகை

நான் விளம்பரப்படுத்தும் ஆணுறைகள் தான் பல வகைகளில் வருகிறது. பாபா ராம்தேவ் விரைவில் பதாஞ்சலி ஆணுறைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.

சவால்

சவால்

ஆணுறை விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் நான் என் வாழ்வில் எடுத்த அர்த்தமுள்ள முடிவு ஆகும். எந்த நிறுவனமாவது நான் விளம்பரப்படுத்தும் ஆணுறையை விட சிறந்ததை தயாரித்தால் அதை சந்தோஷமாக விளம்பரப்படுத்துவேன் என்று சவால் விட்டுள்ளார் ராக்கி சாவந்த்.

English summary
Bollywood actress Rakhi Sawant said in a statement, the actress said, "Virat Kohli and Anushka Sharma are the loveliest couple. They just stepped into their married life. I want to gift my condoms to them so that they play safe and share their feedback on the product after experiencing it."

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X