’ஒரு துண்டு நிலமா நம்மளை பிரிக்க போகுது’ - விஜய் ஆண்டனி ட்வீட்!
சென்னை: அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தரலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்று தீர்ப்பை மதித்து ஏற்க வேண்டும் என பாலிவுட் பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தனது ட்விட்டர் பக்கத்தில், அயோத்தி தீர்ப்பு குறித்த கருத்தை பதிவிட்டுள்ளார்.

விடுறா மச்சான்
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக கொலைகாரன் படம் வெளியானது. தற்போது, தமிழரசன், காக்கி உள்ளிட்ட படங்களில் வரிசையாக விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.
இந்நிலையில், அயோத்தி தீர்ப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில், 'விடுறா மச்சான் ஒரு துண்டு நிலமா நம்மளை பிரிக்க போகுது' என்ற வாசகத்துடன் இந்து, இஸ்லாமிய குழந்தைகள் நட்போடு சிரிப்போடு நடைபோட்டு வரும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
அற்புதமான நாள்
தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் அயோத்தி தீர்ப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'என்ன ஒரு அற்புதமான நாள், பழைய விஷயங்கள் அப்படியே போகட்டும், ஒற்றுமையுடன் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்று சேர்வோம்' என பதிவிட்டுள்ளார்.
தீர்ப்புக்கு சல்யூட்
தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் நடிகை டாப்ஸி, தனது ட்விட்டர் பக்கத்தில், உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்புக்கு ஒரு சல்யூட். தேவையானது நிறைவேறிவிட்டது. இனி இந்தியாவின் முக்கிய வளர்ச்சி நோக்கி நகர வேண்டும் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











