»   »  ஜூலியை காதலிக்கிறேன்: ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்ட 'ஸ்ரீ'

ஜூலியை காதலிக்கிறேன்: ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்ட 'ஸ்ரீ'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஸ்ரீ ஜூலியை காதலிப்பதாக ஃபேஸ்புக்கில் யாரோ ஸ்ரீயின் பெயரில் போலி கணக்கு துவங்கி ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் செல்போன், இன்டர்நெட் பயன்படுத்தக் கூடாது. இருப்பினும் காய்தரி ரகுராம், கணேஷ் வெங்கட்ராம் ட்வீட்டினார்கள்.

இந்நிலையில் தான் ஸ்ரீயின் போலி ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் வெளியானது.

டுபாக்கூர்

ஸ்ரீயின் பெயரில் யாரோ ஃபேஸ்புக்கில் போலி கணக்கு துவங்கி பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓடி வந்துவிட்டேன், காய்ச்சல் என்று பொய் சொல்லிட்டு ஷோவில் இருந்து ஓடி வந்துவிட்டேன் என்று போஸ்ட் போட்டுள்ளனர்.

ஜூலி

ஜூலி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஜூலியானாவை காதலிப்பதாக ஸ்ரீயின் டுபாக்கூர் பேஜில் ஸ்டேட்டஸ் போடப்பட்டுள்ளது. இந்த போலி கணக்கு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஸ்ரீ

ஸ்ரீ

பிக் பாஸ் வீட்டில் ஜூலி ஸ்ரீ அருகில் அமர்ந்து ஷோவை விட்டு போகாதே என்றார். மேலும் என்னை கட்டிப்பிடிக்க ஆளில்லை என்று ஜூலி ஸ்ரீயிடம் கூறியது ட்விட்டரில் டிரெண்டானது.

காயம்

காயம்

ஜூலிக்கு கையில் காயம் ஏற்பட்டபோதும் ஸ்ரீ தான் மருந்து போட்டார். ஏற்கனவே ஜூலி, ஸ்ரீயை பற்றி ஏகப்பட்ட காதல் மீம்ஸ்கள் வலம் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A fake facebook page has been created in the name of Big boss contestant Sri and it said that he is in love with Juliana.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil