கமல் தாளிச்ச கையோடு பிக் பாஸில் இருந்து வெளியேறுவது யாருன்னு பாருங்க
சென்னை: கமல் ஹாஸன் தாளிச்ச கையோடு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்று கூறி வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி நேற்று தான் திருப்தியாக இருந்தது. காரணம் ஓவராக ஆட்டம் போட்ட மகத், ஐஸ்வர்யா, யாஷிகா ஆகியோரை கமல் தாளிச்சது தான். நேற்று கமல் சொன்ன சில உண்மையும் மக்களுக்கு பிடித்திருந்தது.
இந்நிலையில் இன்று வெளியேறப் போவது யார் என்பது குறித்த ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
மும்தாஜ்
தாடி பாலாஜி, சென்றாயன், மகத், மும்தாஜ் ஆகியோரில் ஒருவரே இன்று வெளியேற்றப்படுகிறார். இந்நிலையில் புதிதாக ஏதோ சிவப்பு நிற கார்டை காட்டி குழப்புகிறாரே கமல்.
சென்றாயன்
இன்று இரவு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது மகத்தா, சென்றாயனா என்று நம்மை குழம்ப வைப்பதாக நினைத்து ஒரு ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
தெளிவு
மகத், சென்றாயன் ஆகிய இருவரில் யார் வெளியே போகிறார் என்பதை கண்டுபிடிக்க முடியாதபடி குழப்பினாலும் பார்வையாளர்கள் ரொம்பத் தெளிவாகத் தான் உள்ளனர்.
கோபம்
மகத் மீது இருக்கும் கோபத்தால் அவர் வெளியேறுவதை பார்த்து ஆனந்தப்பட பார்வையாளர்கள் தயாராகிவிட்டனர். விளையாட்டை விளையாட்டாக இல்லாமல் சீரியஸாக எடுத்து பெயரை கெடுத்துக் கொண்டார் மகத்.


Click it and Unblock the Notifications











