ஆர்யாவை அடுத்து நயனுக்கு யார் நெருக்கம்னு தெரியுமா?
சென்னை: நயன்தாராவின் புதிய தோழி யார் என்று உங்களுக்கு தெரியுமா?
காதல் முறிவுக்கு பிறகு சினிமாவில் இரண்டாவது சுற்று வரும் நயன்தாராவின் கை நிறைய படங்கள் உள்ளன. மேலும் அவரை ஒரு பாடலுக்கு ஆட வைக்கவும் பலர் ஆர்வமாக உள்ளனர்.
காதல் முறிவுக்கு பிறகு அமைதியாக இருக்கும் நயன்தாரா யாரையும் அவ்வளவு சீக்கிரம் தனது நட்பு வட்டாரத்தில் சேர்ப்பதில்லையாம்.

நண்பேன்டா ஆர்யா
நயன்தாராவின் நல்ல நண்பராக இருப்பவர் ஆர்யா. ஆனால் அவருடன் காதல் என்று தான் பெரும்பாலும் செய்திகள் வருகின்றன.

தனுஷ்
யாரடி நீ மோகினி படத்தில் நடித்ததில் இருந்தே நயனும், தனுஷும் நண்பர்களாகிவிட்டனர்.

டாப்ஸி
யாரையும் அவ்வளவு சீக்கிரம் நண்பர்களாக ஏற்றுக் கொள்ளாத நயன் தற்போது டாப்ஸியுடன் நட்பாகிவிட்டாராம்.

ஒன்றாக சாப்பிடுவது.. நெடுநேரம் பேசுவது
அஜீத் படத்தில் நடிக்கும் நயனும், டாப்ஸியும் ஷூட்டிங்கின்போது ஒன்றாக சாப்பிடுவது, நெடுநேரம் பேசுவது, போட்டோக்கள் எடுத்துக் கொள்வது என்று தங்கள் நட்பை வளர்க்கின்றனராம்


Click it and Unblock the Notifications











