''த்ரிஷா இல்லாட்டி திவ்யா!'': அனுஷ்காவுக்கு தாவுகிறாரா ராணா...??

By Siva

சென்னை: தெலுங்கு நடிகர் ராணாவின் பெயர் பல நடிககைளுடன் சேர்ந்து வருகிறது. தற்போது அனுஷ்காவுடன் சேர்ந்து அவரது பெயர் அடிபடுகிறது.

தெலுங்கு நடிகர் ராணா அது தாங்க ஆரம்பம் படத்தில் அஜீத்தின் நண்பராக நடித்திருந்தாரே அவர் பெயர் தான் அவ்வப்போது ஒவ்வொரு நடிகையுடன் சேர்ந்து அடிபடும்.

இந்நிலையில் அவரும், த்ரிஷாவும் காதலிப்பதாகவும் செய்திகளும் வரும். அவருடன் பேசப்பட்ட நடிகைகளின் பட்டியலை ஒரு பார்வை பார்த்துவிட்டு வருவோம்.

ஸ்ரேயா

ஸ்ரேயா

ஸ்ரேயா தெலுங்கில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவருக்கும் வஞ்சனையே இல்லாமல் வளர்ந்திருக்கும் ராணாவுக்கும் இடையே காதல் என்று டோலிவுட் பரபரத்தது.

த்ரிஷா

த்ரிஷா

த்ரிஷா டோலிவுட் பக்கம் சென்று கலக்கு கலக்கியபோது அவருக்கும் ராணாவுக்கும் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின, வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பிபாஷா பாசு

பிபாஷா பாசு

ராணா ஆந்திராவில் இருந்து மும்பை பக்கம் சென்று ஒரு இந்தி படத்தில் நடித்தார். அப்போது அவருக்கும் படத்தின் ஹீரோயின் பிபாஷாவுக்கும் லவ்வோ லவ் என்று ஊடகங்களில் செய்திகள் வந்தது.

விடாது த்ரிஷா

விடாது த்ரிஷா

த்ரிஷாவுக்கும் ராணாவுக்கும் காதல் என்று மீடியாக்கள் செய்தி வெளியிட்டாலும் அவர்கள் இதை ஒப்புக் கொள்வதாகவே இல்லை. ஆனால் அண்மையில் வெளிநாட்டில் நடந்த விருது நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் இந்த ஜோடி நெருக்கமாக சுற்றியது தான் கோலிவுட்டில் பெரும் பேச்சாகக் கிடந்தது. அதனால் இந்த காதல் இருக்கு ஆனால் இல்லை என்பது போன்று உள்ளது.

இப்போ அனுஷ்கா

இப்போ அனுஷ்கா

அனுஷ்கா ருத்ரமா தேவி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராணாவும் இருக்கிறார். படப்பிடிப்பின்போது இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகிவிட்டதாம். இருவரும் மணிக்கணக்கில் பேசுகிறார்களாம். இதை பார்த்த படக்குழுவினர் அவர்கள் இருவரும் காதலிப்பதாக காதைக் கடிக்கின்றனர்.

ராணா

ராணா

இத்தனை நடிகைகளுடன் தனது பெயர் அடிபட்டாலும் மனிதர் எதையும் கண்டுகொள்ளாமல் அவர் பாட்டுக்கு இருக்கிறார். ராணா காதல் மன்னனா இல்லை வதந்தி மன்னனா என்பதை அவர் தான் தெளிபடுத்த வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X