நடிகர் சந்தானத்தின் 'முதலாளி' யார் தெரியுமா?
சென்னை: நடிகர் சந்தானம் உதயநிதி ஸ்டாலினை முதலாளி என்று தான் அழைப்பாராம்.
தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோவானார். அந்த படத்தில் அவருடன் சந்தானம் நடித்திருந்தார். அவர்கள் இருவரின் காம்பினேஷன் நன்றாக ஒர்க் அவுட் ஆனது.
இதையடுத்து அவர்கள் இது கதிர்வேலன் காதல் படத்திலும் சேர்ந்து நடித்தனர்.

அறிமுகம்
திமுக ஆட்சியில் இருந்தபோது தான் உதயநிதி ஸ்டாலின் சந்தானத்திற்கு அறிமுகமானாராம்.

பவர்ஃபுல் குடும்பம்
பவர்ஃபுல் குடும்பத்தில் இருந்து வருவதால் உதயநிதியை சந்தானம் முதலாளி என்று அழைத்துள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி அதையடுத்து இது கதிர்வேலன் காதல் படப்படிபிடிப்புகளிலும் சந்தானம் உதயநிதியை முதலாளி என்றே அழைத்துள்ளார்.

உதயநிதி
என்னை முதலாளி என்று அழைக்காதீங்க என்று உதயநிதி எத்தனையோ முறை கூறியும் சந்தானம் கேட்கவில்லையாம். நீங்க சொல்வதை சொல்லுங்க நான் முதலாளி என்று தான் அழைப்பேன் என்று அழைக்கிறாராம்.

முதலாளி
சந்தானத்திற்கு வெகுநாளாக தலைவலியாக இருந்த சொத்து பிரச்சனை ஒன்றை உதயநிதி தீர்த்து வைத்துள்ளார். அதனால் நட்பு, மரியாதை, நன்றிக்கடன் ஆகியவற்றால் சந்தானம் உதயநிதியை முதலாளி என்று தொடர்ந்து அழைக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











