மாஸ்டர் பொங்கல்.. இந்த தேதியில் தான் மாஸ்டர் ரிலீசாகிறது.. என்ன சான்றிதழ் தெரியுமா?

சென்னை: தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 13ம் தேதி ரிலீசாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

#BREAKING பொங்கலுக்கு 'மாஸ்டர்' ரிலீஸ்..!

மாஸ்டர் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

வரும் புத்தாண்டு தினத்தன்று மாஸ்டர் டிரைலரை எதிர்நோக்கி விஜய் ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங்கில் உள்ளனர்.

மாஸ்டர் பொங்கல்

மாஸ்டர் பொங்கல்

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி திரைக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை இன்னமும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் மாஸ்டர் வெளியாவது உறுதியாகி உள்ளது.

என்ன சான்றிதழ்

என்ன சான்றிதழ்

மாஸ்டர் படத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும் நிலையில், படத்தை பார்த்த தணிக்கை குழு மாஸ்டர் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. தற்போது புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக மாஸ்டர் சான்றிதழ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டு விஜய் ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது.

சீ யூ சூன்

சீ யூ சூன்

பொங்கலுக்கு மாஸ்டர் ரிலீஸ் எனக் குறிப்பிடாமல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் See You Soon என பொங்கல் ரிலீஸ் குறித்த சிக்னலை சூப்பராக கொடுத்து ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு கொண்டு சென்றுள்ளார். 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தியேட்டர்களில் தளபதி தரிசனத்தை காண ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

பல்வேறு மொழிகளில்

பல்வேறு மொழிகளில்

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறை தளபதி விஜய்யின் படம் பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. கொரோனா பரவல் காரணமாக மாஸ்டர் ரிலீஸ் இந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வசூல் வேட்டையை ஆட விஜய் ரெடியாகி விட்டார் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X