வருது வருது விலகு விலகு 'சீமராஜா பயாஸ்கோப் வண்டி' வருது #SeemaRajaBioscopeVandi
சென்னை: சீமராஜா படத்தை வேற லெவலில் விளம்பரம் செய்கிறார்கள்.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள சீமராஜா படம் வரும் 13ம் தேதி அதாவது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்கிறார்கள்.

புதுச்சேரி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படத்தை பட்டி தொட்டி எல்லம் விளம்பரம் செய்ய முடிவு செய்துள்ளார்கள். இதையடுத்து சீமராஜா பயாஸ்கோப் வண்டி இன்று முதல் ஊர், ஊராக செல்கிறது. சீமராஜா வண்டியை பார்த்தால் அதன் அருகில் சென்று பயாஸ்கோப் பார்த்து மகிழலாம். பழைய முறையை பயன்படுத்தி படத்தை இப்படியும் விளம்பரம் செய்யலாம் என்று நினைவூட்டியுள்ளனர்.

செல்போன்
மக்கள் செல்போனும் கையுமாக வாட்ஸ்ஆப், ட்விட்டர், ஃபேஸ்புக் என்று ஆன்லைனில் இருக்கும் காலம் இது. அப்படிப்பட்ட காலத்தில் பயாஸ்கோப் காட்டி படத்தை விளம்பரம் செய்ய நினைத்தது ஒரு வித்தியாசமான முயற்சி. பழைய முறைகளை நாம் மெல்ல மெல்ல மறந்து வரும் நிலையில் இப்படி பயாஸ்கோப் வண்டியை அனுப்புவது பாராட்டுக்குரியது.
பாருங்க
சிவகார்த்திகேயனுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது என்பதால் படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்கிறது 24 ஏ.எம். ஸ்டுடியோஸ். நிச்சயம் போட்ட காசை எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். தயாரிப்பு தரப்பு வண்டியை அனுப்பி பயாஸ்கோப் பார்க்குமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
ஆர்வம்
சீமராஜாவை பார்க்க குழந்தைகளும், பெரியவர்களும் ஆர்வம் காட்டி வருவதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











