கமலுக்கு இப்படித்தான் செஞ்சிருக்கோம்.. மேக்கப் மேட்டரை போட்டு உடைத்த ஷீமா!

சென்னை : ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்தது. ஆனால் க்ரைன் விபத்து, கொரோனா, லாக்டவுன் போன்ற பல காரணங்களால் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படவில்லை.

இதற்கிடையில் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேற எந்த படத்தையும் ஷங்கர் இயக்க தடை விதிக்க வேண்டும் என கேட்டு சென்னை மற்றும் ஐதராபாத் ஐகோர்ட்களில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. படத்தின் தாமதத்திற்கு ஷங்கர் தான் என லைகாவும் , லைகா தான் காரணம் என ஷங்கரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனால் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது துவங்கும் என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்தியன் 2 பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல மேக்அப் கலைஞரான ஷீமா தபஷும். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

கமல், காஜலின் மேக்அப் கலைஞர்

கமல், காஜலின் மேக்அப் கலைஞர்

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என துறைகளில் பணியாற்றியவர் ஷீமா. இந்தியன் 2, விக்ரம் உள்ளிட்ட படங்களில் கமலுக்கு இவர் தான் மேக்அப் போட்டுள்ளார். இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கும் இவர் தான் மேக்அப் போட்டுள்ளார்.

 ஷீமாவை அறிமுகப்படுத்திய கமல்

ஷீமாவை அறிமுகப்படுத்திய கமல்

விஸ்வரூபம் ப்ரோமோஷனில் ஷீமாவை சந்தித்த கமல், அவரது சொந்த தயாரிப்பான கடாரம் கொண்டான் படத்தில் விக்ரமிற்கு மேக்அப் போட அறிமுகம் செய்து வைத்து வைத்துள்ளார். இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் கமலுக்கு போடப்பட்டுள்ள மேக்அப் பற்றிய ரகசியத்தை வெளியிட்டுள்ளார் ஷீமா.

ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்அப்

ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்அப்

அவர் கூறுகையில், படம் முழுவதும் கமலுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்அப் போட்டுள்ளோம். இந்திய சினிமாவில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்அப் போடுவதில் கமல் சார் தான் பெஸ்ட். அவர் நடித்த சாச்சி 420 படத்தை 1000 முறை பார்த்திருப்பேன். அவரது தோற்றத்தில் மிகவும் பெர்ஃபெக்ஷன் எதிர்பார்ப்பவர்.

கமலிடம் நிறைய கற்றுக் கொண்டேன்

கமலிடம் நிறைய கற்றுக் கொண்டேன்

கடந்த 5 ஆண்டுகளாக அவரின் அனைத்து நிகழ்ச்சியும் நான் பணியாற்றுகிறேன். அவரிடம் இருந்து தினமும் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன் என்றார். ஆனால் காஜல் அகர்வாலின் லுக் பற்றிய ரகசியத்தை வெளியிட ஷீமா மறுத்து விட்டார்.

காஜல் ரோல் சஸ்பென்ஸ்

காஜல் ரோல் சஸ்பென்ஸ்

அதை திரையில் பார்ப்பதற்காக காத்திருங்கள். காஜலின் ரோலும், லுக்கும் சர்ப்ரைசானது. அது கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். ரொம்ப திறமையான, அற்புதமான நடிகை. விரைவில் படத்தில் மீதமுள்ள காட்சிகளை படமாக்குவோம் என நம்புகிறேன் என்றார்.

விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு

விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு

லாக்டவுன் முடிந்த பிறகு படப்பிடிப்பை தொடர திட்டமிட்டுள்ளனர். தேதிகளை தயாரிப்பு நிர்வாகம் தான் முடிவு செய்யும் என்றார். கமலின் தோற்றம் வயதான, அதே சமயம் மிக வலிமையான, கொலைகார கேரக்டர் என்பதால் அதற்கு ஏற்ற மாதிரி மேக்அப் போட்டுள்ளதாக ஷீமா கூறி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X