தட்டு நிறைய பணம்.. அப்படியே பாலாவுக்கு.. சீமான் செய்த செயல் தெரியுமா?.. யப்பா இப்படி இருந்திருக்காரே

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், நடிகர், இயக்குநர் என மூன்று முகங்களை கொண்டிருப்பவர் சீமான். இப்போது முழுக்க முழுக்க அரசியலுக்கு வந்துவிட்டதால் திரைப்படங்கள் இயக்குவதில்லை. அதேசமயம் எல்ஐகே படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். நேற்றுதான் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில் சீமான் ரோல் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில் சீமான் திரைத்துறையில் 30 வருடங்கள் கடந்திருப்பதையொட்டி அவருக்கு தனியார் யூடியூப் சேனல் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சீமானை இன்றைய தலைமுறையினருக்கு ஒரு அரசியல் கட்சியின் தலைவராகத்தான் தெரியும். ஆனால் 90ஸ் கிட்ஸ்களுக்கு அவர் ஒரு இயக்குநராகவே அறிமுகம். பாரதிராஜா, மணிவண்ணன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்து வேலைகளை கற்றுக்கொண்டார். பசும்பொன் படத்துக்கு இவர்தான் வசனகர்த்தாவும்கூட. அனைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்டு அவர் பாஞ்சாலாங்குறிச்சி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் சுமாராகத்தான் சென்றது. ஆனாலும் சீமான் கவனம் பெற்றார்.

Seeman 30 Years Celebration Bala s Emotional Speech amp amp His Journey from Cinema to Politics
Photo Credit:

தம்பி அருமையான படம்: அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய இனியவளே, வீரநடை படங்கள் தோல்வியடைய; நான்காவதாக இயக்கிய படம்தான் தம்பி. கடந்த 2006ஆம் ஆண்டு அப்படம் வந்தது. மாதவன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. படத்தின் கதைக்களம், மேக்கிங், வசனம் எல்லாம் தீயாக இருந்தன. அப்படத்துக்காக சிறந்த வசனகர்த்தாவுக்கான தமிழ்நாடு அரசு விருதை சீமான் வென்றார். அதற்கு பிறகு அவர் இயக்கிய வாழ்த்துகள் படம் படுதோல்வியை சந்தித்தது.

Also Read
Leader Day 2 Box Office - லீடர் 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கும் லெஜண்ட்
Leader Day 2 Box Office - லீடர் 2வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கும் லெஜண்ட்

அரசியல் பிரவேசம்: அந்தப் படத்தில் முழுக்க முழுக்க தூய தமிழில் வசனங்கள் இடம்பெற்றிருந்தன. அதுவும் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. அந்தப் படத்தை முடித்துவிட்டு முழுக்க முழுக்க அவரது கவனம் தமிழீழத்தின் மீது சென்றது. அங்கே சென்று விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தார். அப்போதிருந்து இனிமேல் நமக்கு சினிமா ஒத்து வராது என்று முடிவெடுத்துவிட்டு; போராட்டம் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தினார். அந்த சமயத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதும் ஆனார். தொடர்ந்து வெளியே வந்த அவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆனார்.

எல்ஐகேவில் சீமான்: இதற்கிடையே விஜய்யை வைத்து அவர் பகலவன் என்ற படத்தை இயக்குவதாக இருந்தார். அப்போதைக்கு இப்படம் பற்றிய பேச்சாகத்தான் எங்கும் இருக்கும். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் கடைசிவரை வரவே இல்லை. அதன் மீது தளபதி ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்ப்பு வைத்திருந்தார்கள். ஏனெனில் சீமான் மாதிரியான ஒரு சமூக கோபமுள்ள படைப்பாளி இயக்கத்தில் விஜய் நடித்தால் சூப்பராக இருக்கும் என நினைத்திருந்தார்கள். ஆனால் மிஸ் ஆகிவிட்டது. தொடர்ந்து அரசியல் களத்தில் இயங்கிவரும் அவர்; இப்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் நடித்திருக்கிறார்.

பாராட்டு விழா: இந்நிலையில் திரைத்துறையில் மூன்று தசாப்தங்களாக சீமான் என்ற பெயரில் அவருக்கு தனியார் யூடியூப் சேனல் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் சேரன், பாலா, சிங்கம்புலி என பலர் கலந்துகொண்டார்கள். விழாவில் பேசிய பாலா, "நான் அவர் மீது அன்பாக இருந்தால் அண்ணன் என்று கூப்பிடுவேன். ரொம்ப அன்பாக இருந்தால் டேய் கருவாயா என்று அழைப்பேன். அதேபோல் அவர் என்னிடம் அன்பாக இருந்தால் தம்பி. ரொம்ப கோபமாக இருந்தால் வாங்க போங்க என்றுதான் அழைப்பார். அவர் எவ்வளவு தூரம் போனாலும் அவர் எனக்கு அண்ணன்தான். அதுதான் எனக்கு வேண்டும்.

தட்டு நிறைய பணம்: அவருடன் இருந்தால் தூய தமிழில் வார்த்தைகளை தேடி பிடித்து பேச வேண்டும். ஒருமுறை படம் ஒன்றுக்காக முன்பணம் வாங்கிவந்தார். தட்டு நிறைய அந்தப் பணம் இருந்தது. சில லட்சங்கள் இருக்கும். அதோடு பழங்களும் இருந்தன. என்னை பார்க்க வந்த அவர்; பழம் எல்லாம் எனக்கு பணம் உனக்கு. எனக்கு பெரிய செலவுகள் இல்லை. உன் செலவுக்கு வைத்துக்கொள் என சொல்லிவிட்டு சென்றார். அவர் பணத்துக்கு மயங்காத ஆள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X