இறையாண்மைக்கு வழக்கு: ராமேசுவரம் கோர்ட்டில் சீமான், அமீர் ஆஜர்

ராமேசுவரத்தில் கடந்த 2008-ம் ஆண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக திரையுலகம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு ராமேசுவரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு வந்தது. இதில் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், சினிமா இயக்குநர் அமீர் ஆகியோர் ஆஜரானார்கள். அப்போது அவர்களிடம் இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி சில கேள்விகளை கேட்டார். பின்னர் மீண்டும் மாலை 4 மணிக்கு ஆஜராக உத்தரவிட்டனர்.
அதன்படி அவர்கள் மாலையில் ஆஜர் ஆனார்கள். பின்னர் இந்த வழக்கை அடுத்த மாதம் (பிப்ரவரி) 10-ந்தேதிக்கு ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும் என்று நீதிபதி குமரேசன் உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











