சீமான் எப்படி சிரிக்குறாருன்னு பாருங்கப்பா.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் பக்காவான ரோல்.. செம போஸ்டர்!
சென்னை: நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்து வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் சீமான் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், பிரதீப் ரங்கநாதன் உடன் அவர் இருக்கும் போஸ்டரை வெளியிட்டு படக்குழு சப்ஜெக்ட்டுக்கு இன்னமும் உயிர் இருக்கு என்பதை நிரூபித்துள்ளது.
அஜித்தின் 62வது படத்தை இயக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எப்போது வரும் என்றும் விக்னேஷ் சிவனை விரட்டி விட்டு மகிழ் திருமேனியை வைத்து அஜித் நடித்த விடாமுயற்சி படம் எப்போது வரும் என ரசிகர்கள் ரிலீஸ் தேதி தெரியாமல் புலம்பி வருகின்றனர்.

அஜித் குமார் விடாமுயற்சியை முடித்துவிட்டு குட் பேட் அக்லி படத்தில் நடித்து அந்த படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்துள்ள டிராகன் திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிரிக்கும் சீமானே: இயக்குநராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் பல படங்களில் பணியாற்றிய சீமான் நாம் தமிழர் கட்சியை தொடங்கி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் நிலையில், படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் பிரதீப்புக்கு அப்பாவாக நடிக்கும் வாய்ப்பு வர அதை ஏற்றுக் கொண்டு நடித்து கொடுத்துள்ளார். பொங்கலை முன்னிட்டு அவர் சிரிக்கும்படியான போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

படம் எப்போ பாஸ் வரும்: லவ் டுடே வெற்றிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க ஆரம்பித்தார். LIC என்கிற டைட்டிலுக்கு பிரச்சனை வந்த நிலையில், LIK என படத்தின் டைட்டில் மாற்றப்பட்டது. படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்தாண்டு போஸ்டரிலும் 2025ம் ஆண்டு ரிலீஸ் என்றே விக்னேஷ் சிவன் குறிப்பிட்டு இருந்தார்.


Click it and Unblock the Notifications











