'இன்ஸ்பெக்டர் புகழ்மாறனாக' சீமான்!

மாயாண்டி குடும்பத்தார் படத்தைத் தந்த மூவி பஜார் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ்மாறன் என்ற வேடத்தில் நடித்துள்ளார் சீமான்.
அவருடன் தருண் சத்ரியா, முரளி, ஐஸ்வர்யா தேவன், ஜெகன்ஜி என பலர் நடித்துள்ளனர். அகத்தியன், பாலசேகரன், பிரபு சாலமன் போன்றோரிடம் உதவி இயக்குநராக இருந்த ராம சுப்பராமன் இயக்கியுள்ளார்.
கண்டுபிடி கண்டுபிடி படம் பற்றி அவர் கூறுகையில், "இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் படம். ஒரு திருமண மண்டபத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு கதைமுடிகின்றது. ஒரு திருமணம் இப்படிதான் நடக்க வேண்டும். அதே சமயம் இப்படி ஒரு பிரச்னை நடந்துவிடக் கூடாது என்று படம்பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும் படம் இது.
கேரளாவிலிருந்து ஐஸ்வர்யா தேவன் என்பவரை நாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ்மாறன் என்ற கேரக்டரில் சீமான் நடித்துள்ளார் என்பதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்துள்ளார். அவரது நடிப்புத் திறனை முழுமையாக பார்க்கும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைக்கும்," என்றார்.


Click it and Unblock the Notifications











