ஜனநாயகன் படம் பகவந்த் கேசரி ரீமேக்தான்.. பாலைய்யா மாதிரியே பேசுறாரு.. சீமான் அதிரடி
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதுதான் விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்பட்டிருப்பதால் பெரிய எதிர்பார்ப்பை படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்புதான் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்தது. இந்நிலையில் இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஜனநாயகன் படத்தை அட்டாக் செய்திருக்கிறார்.
கோட் படத்துக்கு பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்திருக்கிறார் விஜய். அரசியல் பிரவேசம் செய்திருப்பதன் காரணமாக இதுதான் அவருடைய கடைசி படம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இதன் மீது ஓவர் ஹைப் தளபதி ரசிகர்கள் மத்தியில் எகிறியிருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க; முக்கியமான கதாபாத்திரத்தை மமிதா பைஜு ஏற்றிருக்கிறார். பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார்.
இசை வெளியீட்டு விழா: படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் கடந்த 27ஆம் தேதி நடந்தது. பிரமாண்டமான அந்த மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டார்கள். ஏராளமான பிரபலங்களும் அதில் பங்கேற்று விஜய்க்கு தங்களது ட்ரிபியூட்டை வழங்கியது; பார்ப்போரை நெகிழ்ச்சியடைய செய்தது. நாசர் உள்ளிட்டோர் எல்லாம், சினிமாவிலிருந்து விலகும் முடிவை விஜய் ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் சூப்பர் பேச்சு: இறுதியாக பேசிய விஜய் கலகலப்பாகவும் பேசினார். மறைமுகமாக அரசியலும் பேசினார். ரசிகர்கள் மீது தனக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் பேசினார். விஜய்யின் அந்தப் பேச்சை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அவருக்கு எதிர் நிலையில் இருப்பவர்கள்கூட உன்னிப்பாக கவனித்தார்கள் என்பதுதான் உண்மை. கோலாகலமாக விழா நடந்து முடிந்ததை அடுத்து பத்திரமாக சென்னைக்கும் திரும்பிவிட்டார் விஜய்.
வினோத் கொடுத்த விளக்கம்: இதற்கிடையே இப்படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று நீண்ட நாட்களாக பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து இசை வெளியீட்டு விழாவில் பேசிய வினோத்தோ, 'இது ரீமேக் படமா இல்லை கொஞ்சம் ரீமேக் படமா என்று பேசுகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் ஒன்று சொல்கிறேன். ஐயா இது முழுக்க முழுக்க தளபதி படம்' என்று விளக்கினார். இந்நிலையில் இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் ஜனநாயகன் படத்தையும், விஜய்யையும் அட்டாக் செய்து பேசியிருக்கிறார்.
சீமான் பேச்சு: ஒரு மேடையில் பேசிய அவர், "விஜய் இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அது தெலுங்கில் பாலைய்யா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான். ப்ரைம் வீடியோவில் இருக்கிறது பாருங்கள். அதில் எப்படி பாலகிருஷ்ணா வசனம் பேசுவாரோ அதேபோல் விஜய்யும் பேசுக்கொண்டிருக்கிறார். இயக்குநரின் கீழ் நடித்து நடித்து பழகி; அரசியலுக்கும் ஒரு இயக்குநர் தேவைப்படுகிறார். விஜய்யின் கூட்டம் கொள்கையே இல்லாத ஒரு கோமாளி கூட்டம்" என்றார்.


Click it and Unblock the Notifications











