twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெரிய ஒரு விரல் புரட்சியாம், சுடுகாட்டில் கூட வெற்றிடம் இருக்கு: விஜய், ரஜினியை விளாசிய சீமான்

    By Siva
    |

    சென்னை: ரஜினிகாந்த், கமல் ஹாஸன், விஜய்யை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளாசியுள்ளார்.

    நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசியது விஜய், ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

    2018ல் கலக்கிய ஹீரோ யாரு!

    இந்த காரணத்தால் அவர்கள் சீமானை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது,

    ரஜினி

    ரஜினி

    எங்களுடன் சேர்ந்து வாழ இனம் மாறத் தேவையில்லை. ஆனால் எங்களை ஆள்வதற்காக இனம் மாறினால் எங்களை விட மோசமான எதிரி இல்லை. ரஜினிகாந்த் அவர்களே நீங்கள் பேட்டா நடிங்க, சோட்டா நடிங்க அதை எல்லாம் கேட்கிறோமா? உங்களின் படத்தை நாங்கள் விமர்சிக்கிறோமா? நீங்கள் நல்லா நடிங்க. ஆனால் தலைவனாக இருந்து முதல்வனாக இருந்து ஆள வேண்டும் என்று நினைப்பதை கனவில் கூட காணக் கூடாது.

    தமிழ்

    தமிழ்

    எங்களை ஆள வேண்டும் என்று நினைக்கக் கூடாது. என் வரலாறு தெரியாமல் என்னை வழிநடத்த முடியாது. தஞ்சாவூருக்கு ஏன் வந்து பார்க்கவில்லை என்று கேட்டால், நான் கட்சி ஆரம்பிக்கவில்லை என்கிறார். கட்சி தான் ஆரம்பிக்கவில்லையே அப்புறம் தூத்துக்குடிக்கு ஏன் போனீங்க? அங்கு போய் சமூக விரோதிகள் ஊடுறுவிவிட்டதாக ஏன் கூறினீர்கள்?

    சுடுகாடு

    சுடுகாடு

    எந்த இடத்திலாவது உங்களின் நடிப்பை, திரை ஆளுமையை நாங்கள் விமர்சிக்கிறோமா? இல்லை. இதை ரஜினி ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு யாரும் இல்லை, வெற்றிடம் இருக்கு என்று ரஜினி கூறுவது வருத்தம் அளிக்கிறது. நல்லக்கண்ணுவை விட ஒரு பெரும் தலைவர் இந்தியாவில் உண்டா?. சுடுகாட்டில் கூட நிறைய வெற்றிடம் இருக்கரு, போய் நிரப்புங்க என்று சொல்லணும் போல இருக்கு.

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் போது அரசியலுக்கு வந்த விஜயகாந்த் தான் உண்மையான ஆண் மகன். இந்த கமல் ஹாஸன், ரஜினிகாந்த் எல்லாம் பேசக் கூடாது. யாரும் இல்லாத பொட்டலில் கம்பு எடுத்து வீசுவது இல்லை வீரம். ஜெயலலிதா இருக்கும்போது ரஜினியும், கமலும் ஏன் பேசவில்லை?. நீங்கள் எல்லாம் ஹீரோக்கள் இல்லை ஜீரோக்கள்.

    சர்கார்

    சர்கார்

    என் தம்பி ஒருத்தன் இருக்கான் விஜய். சர்கார் படத்தில் பேசினால் ஆமாம் பேசினேன் என்று சொல்லணும்ல. அம்மா ஜெயலலிதா அவர்கள் மீது நான் பற்று கொண்டவன். முதல்வர் அவர்களை...டேய் உண்மையிலேயே நீ என் தம்பியா? எடப்பாடி பழனிசாமிக்கு எல்லாமாடா பயப்படுவது?. உன் மீது பெரிய மரியாதை வைத்திருந்தேனடா. ஐயா, முதல்வர் அவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். என்ன ஒரு நேரம் கேடு கெட்ட நேரம். அவரை போய் சந்திச்சு. அவரே ஒரு அடிமை. இதில் ஒரு விரல் புரட்சியாம், ஒரு விரல் புரட்சி. என்னத்த புரட்சி, வறட்சின்னு. என் படத்தில் நடிக்க மாட்டாரு. ஆனால் நான் பேசுவதை எல்லாம் பேசி நடிப்பாரு. என்ன பண்ணுவது, தம்பியாக போயிட்டாரு.

    சிம்பு

    சிம்பு

    தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமேல் என் தம்பி சிலம்பரசன் தான். அவனை வைத்து மூன்று படம் எடுப்பது என்று முடிவு எடுத்துள்ளேன். அதோட பல பேர் நெஞ்சு வெடிச்சு செத்துடுவான். கொன்னு எடுத்துறதுன்னு இரண்டு பேரும் முடிவு எடுத்திருக்கிறோம். சிம்பு தான் ரியல் சூப்பர் ஸ்டார். எல்லோரிடமும் கதையை சொன்னேன் பயந்துட்டான். ஒரேயொருத்தன் நான் நடிக்கிறேன் அண்ணா என்றான். என் தம்பி தான் சொன்னான். ஏன் சொன்னான், தமிழன். தீபாவளிக்கு கொண்டு வர்றேன் உடன்பிறப்பு படம். இதென்ன பேச்சு படம் ரொம்ப பேசும் என்றார்.

    English summary
    Naam Tamizhar chief Seeman's speech has irked Vijay and Rajini fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X