அன்று ஆளுநர் மாளிகையில்.. இன்று டெல்லி பிரதிநிதியாக..பழைய போட்டோவை தூக்கி அடிக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சியில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாகக் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் இருந்துகொண்டு தமிழக அரசின் முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதும், மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடமிருந்து முறைப்படிப் பெற்றுத் தருவதுமே இந்தச் சிறப்புப் பிரதிநிதியின் முக்கியப் பொறுப்பாகும். இப்படிப்பட்ட ஒரு இமாலயப் பொறுப்பில், முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

படத் தயாரிப்பாளருக்குப் பரிசா?: முக்கியத்துவம் வாய்ந்த இந்த உயர் பொறுப்பை, நிர்வாகத் திறமை வாய்ந்த அதிகாரிகளுக்கோ அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ தராமல், தனது சொந்தப் படத் தயாரிப்பாளருக்கு முதல்வர் விஜய் வழங்கியிருப்பது அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடு என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

CM Vijay Jana nayagan Seeman

சீமான் சீற்றம்: இந்த நியமனத்தைக் கடுமையாகக் கண்டித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக நாம் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் திரண்டு போராடிக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரையே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதியாக நியமித்திருப்பது வெட்கக்கேடு இல்லையா?

அப்போ புரியல இப்போ புரியுது: தமிழே அறியாத, தமிழ்நாட்டின் மண்ணின் தன்மையே தெரியாத ஒருவரைத் தமிழ்நாட்டுக்கான அதிகாரப்பூர்வப் பிரதிநிதியாக டெல்லியில் அமர்த்துவது உலகெங்கும் வாழும் தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? தனது திரைப்படத்தைத் தயாரித்தார் எனும் ஒற்றைக் காரணத்திற்காக மட்டுமே முதல்வர் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என சாடியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான ஒருவரை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் வலியுறுத்தி உள்ளார். இந்த செய்தியாளர் கடுப்பான நெட்டிசன்ஸ் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரைச் சந்திக்கச் சென்றபோது, ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரான வெங்கட நாராயணாவும் அவருடன் சென்று இருந்தார். அதற்கான காரணம் அப்போ புரியவில்லை இப்போ புரிகிறது என நெட்டிசன்கள் இதை வன்மையாக கண்டித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X