சீமான் தந்தை மறைவு.. அண்ணனுக்கு வார்த்தையால் ஆறுதல் சொல்லி மாளாது.. பிரபல தயாரிப்பாளர் இரங்கல்!
சென்னை: சீமான் தந்தை மறைவுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்.
சிவகங்கை மாவட்டம் அரணையூரில் வசித்து வந்த செந்தமிழன் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார்.

செந்தமிழன் மறைவு
சீமான் தந்தையின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியினரும் அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சினிமா பிரபலங்களும் செந்தமிழனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சுரெஷ் காமாட்சி இரங்கல்
அந்த வகையில் சிம்பு நடிப்பில் உருவாகும் மாநாடு படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சியும் சீமான் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், அண்ணனின் அன்னையாய் வாழ்ந்த தந்தையை இழந்துவிட்டோம் மிகுந்த வருத்தமளிக்கிறது.

வார்த்தையால் சொல்லி மாளாது
தந்தை தாயின் மீது மிகுந்த அன்பும் நேசமும் மரியாதையுமுள்ளவர் அண்ணன் சீமான். பெயந்துயர நிகழ்வை சந்தித்திருக்கும் அண்ணனுக்கு வார்த்தையால் ஆறுதல் சொல்லி மாளாது.

முருக பாதத்தில்..
தந்தையின் ஆன்மா செந்தமிழாய் முருக பாதத்தில் இளைப்பாற வேண்டிக் கொள்கிறேன்.. இவ்வாறு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு பேரிழப்பு
இதேபோல் இயக்குநர் பாரதிராஜாவும் சீமான் தந்தையின் மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். என் பிள்ளை சீமானைப் பெற்றெடுத்த தந்தை திரு.செந்தமிழன் அவர்களின் மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார்.

அண்ணனுக்கு ஆறுதல்
இயக்குநர் சேரனும் சீமான் தந்தையின் மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது. சீமான் அண்ணன் அவர்களின் தந்தை இயற்கை எய்தினார்.. பெற்ற தந்தையை இழந்து நிற்கும் அண்ணனுக்கு ஆறுதல்கள்.. அப்பாவின் நல்லெண்ணம் கொண்ட மனது அமைதி கொள்ளட்டும்.. என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











