என்னாது விடுதலை படத்தில் விஜய்சேதுபதிக்கு பதில் அந்த பிரபலம் நடிக்க வேண்டியதா?.. கிரேட் எஸ்கேப்!

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கவுதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி விடுதலை திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் போராளியாக வாத்தியார் என்னும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

ஆரம்பத்தில் வெறும் 8 நாட்கள் தான் சூட்டிங் என கால்ஷீட் கேட்ட வெற்றிமாறன் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து 100 நாட்களுக்கு மேல் விஜய் சேதுபதியை வைத்து இயக்கி உள்ளதாக சமீபத்தில் விஜய் சேதுபதி அளித்த பேட்டியில் வெளிப்படையாக கூறினார்.

Seeman is the first choice for Viduthalai movie Vaathiyaar role

காணாமல் போன சூரி: விடுதலை திரைப்படத்தின் ஹீரோ சூரி என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படத்தில் விஜய் சேதுபதி இணைந்தவுடன் மொத்த படம் அவரது தோள் மீது அமர்ந்து விட்டது. மேலும் குறிப்பாக வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய நிலையில், கான்ஸ்டபிள் குமரேசன் காணாமலே போய்விட்டார்.

விடுதலை 2விலும் விஜய் சேதுபதி தான்: விடுதலை முதல் பாகத்தின் ஹீரோ சூரி என்றும் இரண்டாம் பாகத்தின் நாயகன் விஜய் சேதுபதி என்றும் பிரிக்கப்பட்டு இந்த படம் உருவாகி வருகிறது. முதல் பாகத்திலேயே விஜய் சேதுபதி வந்த பின்னர் அவர் ஹீரோவாக மாறிவிட்டார். மேலும் இரண்டாம் பாதியின் லீடு காட்சிகளிலும் சேதுபதியின் மிரட்டல் அதிகம் இருந்தன. விடுதலை இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார். அவரது இளமை கால காட்சிகளும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என தெரிகிறது.

சீமான் நடிக்க வேண்டியது: சமீபத்தில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சீமான், முதலில் அந்த வாத்தியார் கதாபாத்திரத்தில் நடிக்க வெற்றிமாறன் என்னைத்தான் அணுகினார் என்றும் வெற்றிமாறன் கேட்ட அளவுக்கு நாட்களை என்னால் ஒதுக்க முடியாத காரணத்தினால் தம்பி விஜய்சேதுபதி அந்த படத்தில் கமிட் ஆகி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் என்றும் பேசினார்.

வடசென்னை 2 வாய்ப்பில்லை: மேலும், மேடையில் பேசிய சீமான் வடசென்னை 2 எடுக்கிறேன் என ஏமாற்றிவிட்டார் வெற்றிமாறன். ஆனால் விடுதலை 2 படத்தின் காட்சிகளை ஏற்கனவே கொஞ்சம் எடுத்து வைத்த நிலையில், அந்தப் படத்தை முடித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். விடுதலை முதல் பாகத்தை விட நான்கு மடங்கு வீரியத்துடன் இரண்டாம் பாகம் வெளியாக காத்திருக்கிறது என்றும் சீமான் பேசியுள்ளார்.

கிரேட் எஸ்கேப்: விஜய் சேதுபதியே 8 நாட்கள் மட்டும் கால்ஷீட் கேட்டுவிட்டு 100 நாட்கள் ஆக்கிவிட்டார். சீமான் சிக்கியிருந்தால் அவ்வளவு தான் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சீமான் கிரேட் எஸ்கேப் என பதிவிட்டு வருகின்றனர். சீமான் நடித்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விஜய்சேதுபதி நடித்ததால் தான் படம் வெயிட்டாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.

விக்னேஷ் சிவன் படத்தில்: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் அடுத்து விஜய்சேதுபதி இயக்கி வரும் எல்ஐசி படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இந்த படத்தை எத்தனை நாட்களில் எடுத்து முடிக்கப் போகிறாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X