LIK படத்தில் நடிச்சிருக்காரு.. அதை விட்டுட்டு TN 2026க்கு விமர்சனம் செய்த சீமான்.. விஜய் தான் விஷயமா?

சென்னை: தம்பி ராமையாவின் மகன் இயக்கியிருக்கும் படம் TN 2026. இப்படத்துக்கு தம்பி ராமையாதான் கதை, வசனம் எழுதியிருக்கிறார். நட்டி நட்ராஜ் ஹீரோவாக நடித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே இதன் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்தது. கடந்த பத்தாம் தேதி ரிலீஸான படத்துக்கு ரசிகர்கள் ஓரளவு நல்ல வரவேற்பையே கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் இப்படம் குறித்து பேசியிருக்கிறார்.

தம்பி ராமையா அடிப்படையில் ஒரு இயக்குநர். இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தை இயக்கியது அவர்தான். இயக்கம் பெரிதாக கை கொடுக்காததால்; உடனடியாக இயக்குநர் ரோலிலிருந்து நடிகர் ரோலுக்கு மாற; ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். தேசிய விருதும் கிடைத்தது. அவரது மகன் உமாபதியும் தன்னுடைய தந்தை வழியில் சினிமாவில் வெல்ல ஆசைப்பட்டார். அதனையடுத்து ராஜாக்கிளி உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர்; பெரிய வெற்றி எதுவும் கிடைக்காமல் போராடிக்கொண்டிருந்தார்.

Seeman Reacts to TN 2026 Supports Film Amid Vijay Troll Controversy
Photo Credit:

TN 2026: சூழல் இப்படி இருக்க தனது தந்தை கதை, வசனத்தில் திரைக்கதை அமைத்து TN 2026 படத்தை இயக்கினார். அதில் நட்டி நட்ராஜ் ஹீரோவாக நடிக்க; அவருடன் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ரெடிங் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லர் வெளியானபோது, இந்தப் படத்தில் விஜய்யை கிண்டல் செய்திருக்கிறார்கள் என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பின. மேலும் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்துக்கு ஒருதரப்பு சென்றது. நல்வாய்ப்பாக படத்துக்கு தடை போடப்படவில்லை.

எப்படி இருக்கிறது படம்: ட்ரெய்லர் பற்ற வைத்த எதிர்பார்ப்போடு படம் வெளியானது. நினைத்தபடி விஜய்யை படத்தில் கிண்டல் செய்திருந்தாலும்; அவருக்கு சப்போர்ட் செய்யும்படியான காட்சிகளும் இருந்தன. மேலும் ஏ.ஆர்.முருகதாஸ், சீமான், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலரையும் படத்தில் வைத்து செய்துவிட்டார்கள். நீண்ட வருடங்கள் கழித்து தமிழில் அரசியல் விமர்சன படம் வந்தது ரசிகர்களூக்கு மகிழ்ச்சிதான் என்றாலும்; திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்தப் படம் குறித்து பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

Also Read
பிரதீப் ரங்கநாதனுக்கு 2K கிட்ஸ்தான் ரசிகர்கள்னு யார் சொன்னது?.. இங்க பாருங்க பாட்டி எவ்வளவு பெரிய ரசிகைனு
பிரதீப் ரங்கநாதனுக்கு 2K கிட்ஸ்தான் ரசிகர்கள்னு யார் சொன்னது?.. இங்க பாருங்க பாட்டி எவ்வளவு பெரிய ரசிகைனு

சீமான் பேசியது: அந்த வீடியோவில் பேசிய சீமான், "நாட்டில் நடக்கிற அரசியல் சூழல்களை, அவலங்களை, அரசுடைய நிர்வாக சீர்கேடுகளை துணிந்து சுட்டி காட்டுகிற படங்களோ, கட்டுரைகளோ வருவது எல்லாம் குறைந்துவிட்டது. நாங்கள் அமைதிப்படை எடுத்தபோது எவ்வளவு நெருக்கடிகளை சந்தித்தோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். படம் முழுக்க சிரிப்பலைகள் கேட்கின்றன. இன்றைய அரசியலில் நிகழும் அவல நிலையை எடுத்துரைப்பது மாதிரி வந்திருப்பது ரொம்ப மகிழ்ச்சி.

அவர்களுக்கு அன்பும் வாழ்த்தும்: படத்தில் சிலரை புண்படுத்தியிருப்பதாக சிலர் சொன்னார்கள். ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் யாரையும் புண்படுத்தாமல் அரசியல் விமர்சன படம் வர வேண்டும், தர வேண்டும் என்பதற்காக படைக்கப்பட்ட படம். எல்லோரும் பார்த்து ரசித்து படைப்பாளிகளை, படக்குழுவினரை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். கண்ணன் ரவி, தம்பி உமாபதி ராமையா ஆகியோருக்கு எனது அன்பும் வாழ்த்தும்"என குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

விஜய்தான் விஷயமோ?: மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, தேர்தல் பரப்புரைக்கு இடையிலும் சீமான் திரை விமர்சனம் எல்லாம் செய்கிறாரே. இத்தனைக்கும் அவர் எல்ஐகே படத்தில் நடித்திருக்கிறார். அதுகுறித்து பேசவில்லை. ஆனால் இந்தப் படத்தை பற்றி பேசுகிறார். அதற்கு காரணம், படத்தில் விஜய்யை கிண்டல் செய்திருப்பதுதானோ என்று தவெகவினர் வழக்கம்போல் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியினரும் பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X